Latest

10/recent/ticker-posts

மைல்கல்லாக நடைபெற்ற மாநில செயற்குழு (பாண்டிச்சேரி 19-06-2024)

 மைல்கல்லாக நடைபெற்ற மாநில செயற்குழு - (பாண்டிச்சேரி 19-6-24)



🚩இயக்கத்தில் ஜனநாயகம் செயல்பாடு,* 

🚩போராட்டங்களுக்கு முன்னுரிமை

🚩பொது இயக்கங்களில் பங்கேற்பு

தோழர்களே,

 தமிழ் மாநில சங்கத்தின் செயற்குழு கூட்டம் பாண்டிச்சேரியில் 2024 ஜூன் 19ஆம் தேதி அன்று சிறப்பாக நடைபெற்றது. செயற்குழு நிகழ்வுகள் சரியாக காலை 9 மணிக்கு துவங்கியன.

      தேசியக் கொடியினை AIBDPA சங்கத்தின் பாண்டிச்சேரி முன்னாள் மாவட்ட செயலரும் AIBDPA இயக்கத்தின் மூத்த தலைவருமான தோழர் P.சக்திவேல் அவர்களும், சங்க கொடியினை நமது மத்திய சங்க பொதுச் செயலாளர் தோழர்.KG ஜெயராஜ் அவர்களும்  எழுச்சிமிகு கோஷங்களுக்கு இடையே ஏற்றி வைத்தனர். 

   தியாகிகளுக்கு உணர்வுப்பூர்வமான அஞ்சலி செலுத்தப்பட்டது. செயற்குழு  மாநிலத் தலைவர் தோழர் சி கே நரசிம்மன்* அவர்கள்  தலைமையில்  நடைபெற்றது. தோழர் M.பெருமாள் சாமி மாநிலத் துணைத் தலைவர் அஞ்சலி தீர்மானத்தை வாசிக்க அவை, ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தியது.

     பிறகு பாண்டிச்சேரி மாவட்ட செயலர் தோழர் V.ராமகிருஷ்ணன் அவர்களும் மாநிலச் செயலாளர் R.ராஜசேகர் அவர்களும் வரவேற்புரை நிகழ்த்தினார். மாநிலத் தலைவர் தோழர் சி கே நரசிம்மன் அவர்கள் தலைமை உரையாற்றினார்.  மாநிலச் செயலாளர் செயல்பாட்டு அறிக்கையினையும் மாநில பொருளாளர் வரவு செலவு கணக்கையும் சமர்ப்பித்தனர். 

             பொதுச்செயலார் தோழர்.கே.ஜி. ஜெயராஜ் அவர்கள் துவக்க உரை ஆற்றினார். அவரது உரை முழுமையாக தமிழில் இருந்தது தோழர்களுக்கு புரிந்துகொள்ள மிகவும் வசதியாக இருந்தது. பொதுச் செயலாளர் தன்னுடைய உரையில் தமிழ் மாநிலத்தினுடைய வளர்ச்சி, செயல்பாடு ஆகியவற்றை வெகுவாக பாராட்டினார்.  பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்திலும் AIBDPA விலும் தமிழ் மாநிலம் என்றைக்கும் ஒரு போராட்டக் களமாக, முன்னுதாரணமாக உள்ளது என்பதனை சுட்டிக்காட்டினார். தமிழ் மாநிலம் தனக்கு ஒரு உற்சாகத்தின் ஊற்றுகண்* என்பதனையும் குறிப்பிடார். 

            NCCPA, TUI(P&R), WFTU ஆகிய இயக்கங்களோடு நம் இயக்கத்தினுடைய தொடர்பினை சுட்டி காண்பித்து நடைபெற்று முடிந்த TUI  சர்வதேச மாநாட்டில் நடைபெற்ற விவரங்களையும் கோடிட்டு காட்டினார். பாலஸ்தீன மக்களுக்கு எதிராக தொடுக்கப்படும் தாக்குதல்களையும், பிரான்ஸ், ஜெர்மனி, அர்ஜென்டினா போன்ற நாடுகளில் உள்ள வலது சாரி அரசாங்கங்கள் ஓய்வூதியர்களுக்கு எதிரான நிலைப்பாடு எடுப்பதனையும் சுட்டிக்காட்டினார். மூன்றாவது TUI மாநாட்டில் தோழர். ஜெயராஜ் இணைய வழியாக கலந்து கொண்டதையும் அதில் WFTU யினுடைய பொதுச் செயலாளர் கலந்துகொண்டு உரையாற்றியதையும் சுட்டி காட்டினார். அக்டோபர் 1 ஓய்வூதிய தினம், மே 1 உழைப்பாளர் தினம் ஆகியவற்றை சிறப்பாக கொண்டாடுவது குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. தோழர்.K.G.ஜெயராஜ் அவர்கள் ஆசிய பகுதியினுடைய பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப்பட்டதையும் குறிப்பிட்டார். 

             பிறகு தேசிய நிலைமையில் நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் ஆளும் பிஜேபி அரசுக்கு கொடுக்கப்பட்ட ஒரு பதிலடி என்பதனையும் 400+, என்ற அவர்கள் 240 இல் முடங்கியதையும், அரசை விமர்சித்தால் UAPA சட்டம் பாய்வதையும், முஸ்லிம் மக்களுக்கு எதிராக புல்டோசர் தாக்குதல் நடைபெறுவதையும் இந்த அரசாங்கத்தினுடைய கோர முகங்களாக சுட்டி காண்பித்தார். 

           தமிழகத்தில் சென்னையில் நடைபெற்ற NCCPA மாநாட்டை பாராட்டியவர் அதில் நடைபெற்ற நிகழ்வுகளையும் விவரித்தார், புதிய பென்ஷன் திட்டத்தை நிராகரிப்பது, பழைய பென்ஷன் திட்டத்தை கொண்டுவர வேண்டிய அவசியத்தையும், EPF பென்ஷன் திட்டத்தில் 1400 அல்லது 1300 தான் பென்ஷன் கிடைக்கிறது என்பதையும், Commutation 12 ஆண்டு காலத்தில் முடிய வேண்டும் என்கின்ற கோரிக்கையினையும், 

             CGHS Hospitals ஒவ்வொரு மாவட்டத்திற்கும் வேண்டும், FMA ரூ.3000 ஆக உயர்த்தப்பட வேண்டும், CGHS மேலும் மேம்படுத்தப்பட வேண்டும், ரயில்வே Concession  வழங்குவதற்கும், Notional இன்கிரிமெண்ட் அமல்படுத்தப்படுவதற்கும் வலியுறுத்தினார்.

          DOT யில் ID கார்டு தரப்பட வேண்டும் என்பதையும் குறிப்பிட்டு இருக்கிறார். பிஎஸ்என்எல் எம் ஆர் எஸ் திட்டத்தில்  போராட்டத்தின் மூலமாக நம்முடைய சாதனைகளை விளக்கினார். 

            ஓய்வூதியர்களுக்கு உறுப்பினர் சரிபார்ப்பு நடைபெற்று சங்கங்கள் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்பதையும், ஒருங்கிணைப்பு குழு போராட்டங்களையும், பிஎஸ்என்எல் இலாகாவிற்கு 4G, 5G சேவைகள் தரப்பட்டவேண்டும், பென்ஷன் ரிவிஷன், ஊதிய மாற்றம் பெறுவதற்கான அவசியத்தையும் போராட்டங்களையும் எடுத்து வைத்துள்ளார்.

               ஓய்வூதியர் சங்கங்களுடன் நடைபெற்ற 17.10.2022 கூட்டத்தில் ஒரு நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. அதை அனைவரும் பயன்படுத்தி முன்னேறி இருந்தால் பென்ஷன் ரிவிஷன் தீர்க்கப்பட்டு இருக்கும் என்பதனையும், ஆனால் ஒரு சில சங்கங்கள் 7th CPC என்று வலியுறுத்திய காரணத்தினால் பிரச்சனை இன்றுவரை தீர்க்கப்படவில்லை என்கின்ற நிலைமையிலையும் எடுத்துரைத்தார். ஆகவே கூட்டுப்போராட்ட குழு எடுத்த முடிவு ஜூலை 2, ஆகஸ்ட், செப்டம்பர் போராட்டங்களை முன் நின்று நடத்த வேண்டும் என்பதையும் வலியுறுத்தி தன்னுடைய உரையினை முடித்துக் கொண்டார்.

 பிறகு  தோழர். P.மாணிக்க மூர்த்தி, தோழர் M.செல்வராஜ், தோழர் T.K.பிரசன்னன் ஆகியோவை கொண்ட தீர்மான கமிட்டி அமைக்கப்பட்டது. 

மினிட்ஸ் கமிட்டிக்கு தோழர். A.முகமது ஜாபர் அவர்களை நியமித்தது. அவருக்கு உறுதுணையாக திருப்பூர் தோழர் M.பழனிவேல் சுவாமி அவர்கள் உதவி செய்தார். 

மாநிலச் செயலரின் அறிக்கையில், உறுப்பினர் எண்ணிக்கை 6500 இல் இருந்து 7033 ஆக உயர்ந்திருப்பது, கோவை, தர்மபுரி, நாகர்கோயில்,சேலம், திருச்சி ஆகிய மாவட்டங்கள் தங்களுடைய உறுப்பினர் எண்ணிக்கையை கணிசமாக உயர்த்தி இருப்பது ஆகியவை பாராட்டப்பட்டது.

              107 கிளைகள் மாநாடு நடத்தி இருப்பது இந்த இயக்கத்தின் ஜனநாயக செயல்பாட்டை சுட்டிக்காட்டுகிறது*. மாவட்டங்கள் முறையாக கூட்டங்கள் கூட்டுவது, மாநில மைய கூட்டங்கள்,  மாவட்டச் செயலாளர்கள் கூட்டங்கள், மாநில செயற்குழு (இணைய வழியாக) நடத்துவது அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. 

            NCCPA வின் அகில இந்திய மாநாடு சிறப்பாக நடைபெற்றது, CCA அலுவலகத்தில் பென்ஷன் பட்டுவாடா பிரச்சனைக்காக *Savingram  இயக்கம் நடத்தியது, புத்தக விநியோகங்கள், பொது இயக்கங்களில் நமது பங்கேற்பு குறிப்பாக பொன்மலை தியாகிகள் தினம், வெண்மணி தியாகிகள் இயக்கங்கள், NCCPA போராட்டங்கள் டெல்லி பேரணி 31.7.23,   25.8.23 JF டெல்லி பேரணி இயக்கங்களிலும் நம்முடைய பங்களிப்பு குறிப்பிடப்பட்டிருந்தது. 

               CCA அலுவலகம் நடத்தும் DOT பென்ஷன் அதாலத்துகள், பிஎஸ்என்எல்  அலுவலகம் நடத்தும் மெடிக்கல் அதாலத்துக்கள் ஆகியவையில் பாராட்டப்பட்டு, அதில் நம்முடைய பங்களிப்பு குறிப்பிடப்பட்டிருந்தது.  மாவட்டங்களில் நோடல் அதிகாரிகள் நியமனம் நம்முடைய தொடர் முயற்சிக்கு கிடைத்த வெற்றி.சொசைட்டி பிரச்சனை, NOTIONAL இன்கிரிமென்ட் வழக்குகள் ஆகியவையும் குறிப்பிடப்பட்டிருந்தது. 

வரவு செலவு கணக்குகள் முறையாக பராமரிக்கப்படுவதும் மாவட்டங்களுக்கு ரசீதுகள் சரியாக அனுப்பப்படுவதும் வரவு செலவு கணக்கு அவ்வப்போது தணிக்கை செய்யப்படுவதும் பாராட்டப்பட்டிருந்தது.

           ஈரோடு செயற்குழுவிற்கும் பாண்டிச்சேரி செயற்குழுவுக்கும் இடைப்பட்ட காலத்தில் 385க்கு மேற்பட்ட பிரச்சினைகள் தீர்க்கப்பட்டிருப்பதை மாவட்டம் வாரியாக அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.

             மாநில பொருளாளர் தோழர் S.நடராஜா அவர்கள் வரவு செலவு கணக்கினை சமர்ப்பித்து மாவட்டங்கள் முறையாக சந்தா பணத்தை மாநில சங்கத்துக்கு மத்திய சங்கத்துக்கும் அனுப்ப வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். மருத்துவ நன்கொடை வசூலிக்க வேண்டியதையும் அதை முறையாக அனைத்து பகுதிகளுக்கு அனுப்ப வேண்டியதையும் வலியுறுத்தினார். 

இதன் அடிப்படையில் விவாதங்கள் நடைபெற்றது.

 விவாதத்தில் 16 மாவட்ட செயலாளர்கள் உட்பட 44 பேர் கருத்துக்களை முன்வைத்து  உரையாற்றினார்கள். 

இந்த மாநில செயற்குழுவில் அனைத்து மாநில சங்க நிர்வாகிகள், சிறப்பு அழைப்பாளர்கள் உட்பட அனைவரும் பேசுவதற்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. 

மத்திய சங்க நிர்வாகிகள் தோழர் எஸ் மோகன் தாஸ் தோழர் வி வெங்கட்ராமன் தோழியர் வி.சீதாலட்சுமி ஆகியோர் செயற்குழு வாழ்த்தி தங்களுடைய கருத்துக்களை தெரிவித்தனர்.

விவாதம் 4 மணி நேரம் நடைபெற்றது. 

விவாதத்தின் இறுதியில் வருங்கால கடமைகளாக,

1) உறுப்பினர் இயக்கத்தை தொடர்ந்து நடத்துவது, 

2) மாவட்ட மாநாடுகளை செப்டம்பர் இறுதிக்குள் நடத்தி முடிப்பது, 

3) மாநில மாநாடு நடத்துவதற்கு மாவட்டங்கள் தீர்மானித்து கருத்து தெரிவிப்பது, 

4) மகளிர் கிளைகள் அனைத்து மாவட்டங்களிலும் உருவாக்குவது, 

5) சங்க பத்திரிக்கை ஆரம்பிப்பது, 

6) கூட்டு போராட்ட குழு  இயக்கங்களை எழுச்சியுடன் நடத்துவதற்கு திட்டமிடுவது,

 7) CCA அலுவலக பிரச்சனைகள் தீர்க்கப்படுவதில் காலதாமதம் தவிர்க்க இயக்கங்கள் நடத்துவது ஆகியவை முடிவுகளாக, வரும்கால கடமைகளாக தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

தீர்மானங்களாக :

1) தமிழகத்தில் நடைபெறும் ஆணவ படுகொலைகளுக்கு எதிராக* நடைபெறும் இயக்கங்களில் பங்கேற்பது அவற்றை தடுப்பதற்கு மாநில அரசு தேவையான சட்டங்களை வேண்டும் எனவும், 

2) பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு வளர்ச்சிக்காக 4ஜி 5ஜி  சேவை வழங்குவது,

 3) CGHS சேவைகளை மேம்படுத்துவது,

4) CGHS திட்டத்தை ABHA திட்டத்தில் இணைப்பதை எதிர்ப்பது, 

5)கொரோனா காலத்தில் முடக்கப்பட்ட ரயில்வே Concession வழங்குவது,  

6) Notional  இன்கிரிமென்ட் அனைவருக்கும் வழங்குவது 7)Commutation காலத்தை12 ஆண்டு காலத்தை குறைப்பது, 

8) பென்ஷன் ரிவிஷன் பெறுவதற்கான இயக்கங்களை முன்னெடுப்பது, 

9) பிரின்சிபில் CCA அலுவலகத்தில் பிரச்சனைகள் தீர்வதில் காலதாமத்திற்கு இயக்கங்கள் நடத்துவது, 

10) Joint Forum போராட்டங்களை சிறப்பாக நடத்துவது ஆகிய தீர்மானங்களோடு 

             இந்த செயற்குழு கூட்டத்தை மிகச் சிறப்பாக நடத்திட்ட பாண்டிச்சேரி மாவட்ட சங்கத்திற்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

தோழர்களே,

 இந்த மாநில செயற்குழு கூட்டம் சிறப்பான முறையில் நடைபெறுவதற்கு உதவி செய்த பாண்டிச்சேரி மாவட்ட தோழர்கள் குறிப்பாக தலைவர்/மாநில  அமைப்பு செயலர் தோழர்.V.ராமகிருஷ்ணன் செயலாளர் தோழர்.V.ராமகிருஷ்ணன், உறுதுணையாக நின்ற BSNLEU மாவட்ட செயலர் தோழர் சுப்பிரமணியம் அவர்களுக்கும் ஏனைய மாவட்ட நிர்வாகிகளுக்கும் தமிழ் மாநிலச் சங்கம் தன்னுடைய வாழ்த்துக்களை பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றது. 

.           குளுகுளு மாநாட்டு அரங்கம், சிறப்பான தங்கும் இடங்கள், ஆரோக்கியமான உணவு, சிறந்த உபசரிப்பு, தோழர்களை அழைத்து வருவதற்கான ஏற்பாடுகள் என அனைத்திலும் பாண்டிச்சேரி முத்திரை பதித்துள்ளது. ஒரு *சிறந்த செயற்குழு என்ற திருப்தி* அனைவரும் மனதிலும் நிலைத்து இருக்கிறது. 

            பொதுச் செயலாளர் தோழர் கே ஜி ஜெயராஜ் அவர்கள் பல சிரமங்களுக்கிடையில் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டதும்  இந்த கூட்டத்தின் சிறப்பை மேல் எடுத்துச் சென்றது. இந்த செயற்குழு கூட்டம் 

         தனி முத்திரை பதித்தது எனில் கூட்டம் முறையாக காலை 9 மணி அறிவித்தபடி துவங்கப்பட்டது. மாலை 6.30 முறையாக முடிக்கப்பட்டது. அனைத்து நிர்வாகிகளும் மாவட்டச் செயலாளர்களும் பேசுவதற்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது என்பதும், நேர மேலாண்மையை முழுமையாக அனைவரும் கடைபிடித்ததும் இதில் ஒரு தனித்துவமான நிகழ்வுகள். 

AIBDPA இயக்கத்தின் ஒரு மைல்கல்லாக இந்த செயற்குழு இருக்கும். 

இறுதியாக தோழர். எல். பரமேஸ்வரன் ACS அவர்கள் நன்றி கூற செயற்குழு இனிதே மீதி முடிவடைந்தது. 

தோழமை வாழ்த்துக்களுடன் 
ஆர் .ராஜசேகர்
மாநிலச் செயலாளர்

21 .6. 24

Post a Comment

0 Comments