Latest

10/recent/ticker-posts

19.06.2024ல் நடைபெற்ற NCCPA ONLINE செயற்குழு முடிவுகள் !!ம

19.06.2024ல் நடைபெற்ற  NCCPA ONLINE செயற்குழு முடிவுகள் 

தோழர்களே !!

     19.06.2024 அன்று NCCPA அமைப்பின் அகில இந்திய செயற்குழு இணையவழியில் நடைபெற்றது. தோழர். A. K. கோஷ் தலைமை தாங்கினார்.

நடைபெற்ற விவாதங்களும், முடிவுகளும்:-

1) சென்னையில் நடந்த அகில இந்திய மாநாடு பற்றி விவாதம் தொடங்கியது. மாநாடு ஏழாவதா, ஐந்தாவதா என்ற முதல் கேள்வியே தொடக்கமாக அமைந்தது. 5 வது என குறிப்பிட்டது தவறு எனவும், இல்லை நடந்ததாகச் சொல்லப்பட்ட டெல்லி, செகந்திராபாத் மாநாட்டுகள் சேராது எனவும், ஐந்தாவது தான் சரி என்றும் பலர் பேசினர். முடிவில் ஏழு என்று சொன்ன தோழர். மாத்தூர் உரிய ஆவணம் கொண்டு நிருபிக்க வேண்டும் எனவும், இல்லையெனில் ஐந்தாவது என்பதே தொடரும் என்றும் முடிவு செய்யப்பட்டது.

2) ஏதென்ஸில் நடந்த TUI (P&R) மாநாடு பற்றியும், அதில் கலந்து கொண்ட இந்திய சார்பாளர்கள் , நிகழ்வுகள் பற்றியும் விவாதிக்கப்பட்டது. 

3) NCCPA கோரிக்கை மனுக்கள் அளிக்கப்படும் போது, இனிமேல் இரண்டு விதமான மனுக்கள் அளிக்கப்பட வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது. 

a) CGHS போன்ற மருத்துவம் தொடர்பாக, 
b) ஓய்வூதியம் சம்பந்தமாக. என்று  முடிவு செய்யப்பட்டது. 
அதற்கேற்றபடி தொழிற்சங்க இயக்கங்கள் நடத்தவும் தீர்மானிக்கப்பட்டது. 

# CGHS மீதான கோரிக்கை மனு 29.07.2024 அன்று மக்கள் நலத் துறை அமைச்சருக்கு அளிப்பது என்றும், தொடர்ந்து 6.8.2024 அன்று மாநில மட்டங்களில் தர்ணா நடத்தி, நேரில் மனு அளிப்பது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

#அதே போன்று ஓய்வூதியம் சம்பந்தப்பட்ட கோரிக்கை மனு 5.09.2024 அன்று ஈமெயில் மூலம் அளிப்பது ; 13.09.2024  அன்று மாவட்ட மட்டங்களில் தர்ணா ;  

# 25.09.2024 அன்று மாநில மட்டங்களில் மத்திய அரசு அலுவலகங்களுக்கு முன்பாக தர்ணா நடத்துவது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

# நமது கிளைகள் தங்கள் பகுதியில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்களை இது சம்பந்தமாகப் பார்த்து பேசுவது என்றும், 

# அக்டோபர் கடைசி வாரத்தில் டெல்லியில் தர்ணா போராட்டம் நடத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டது. 

4) AIBDPA பொதுச் செயலர் தோழர்.K. G ஜெயராஜ் அவர்கள் AIBDPA உள்ளிட்ட Joint Forum நடத்தும் போராட்டங்கள் பற்றிக் கூறி, அதற்கு NCCPA ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். முழு மனதாக ஆதரவு அளிக்க, செயற்குழு ஒப்புக் கொண்டது.

தோழமையுடன்
K.G.ஜெயராஜ்
பொதுசெயலர்

தமிழில்
R.ராஜ சேகர்
மாநில செயலர்
AIBDPA TN 
23.6.24








Post a Comment

0 Comments