திருச்சி & தஞ்சை பகுதி ஓய்வூதியர்களுக்கான அதாலத் - 26.07.2024
ஓய்வூதியர் அதாலத் தஞ்சையில் : 26-07-2024
தோழர்களே,
நாம் முன்பு அறிவித்தது போல் CCA அலுவலகம் நடத்துகின்ற பென்ஷன் குறைதீர்க்கும் அதாலத் வரும் 26.7.24 அன்று தஞ்சையில் நடைபெற உள்ளது.
இதில் தஞ்சை மற்றும் திருச்சி BAகள் அடங்கும். எனவே திருச்சி, தஞ்சை, கும்பகோணம்* தோழர்கள் தங்களுடைய பிரச்சனைகளை இந்த அகாலத்திற்கு கொடுக்கலாம். அதற்கான படிவம் கொடுக்கப்பட்டுள்ளது.
பிரச்சனைகளை கொடுப்பதற்கான கடைசி தேதி 5.7.24 மாலை 6 மணி. அஞ்சல் மூலமாகவோ, நேரடியாகவோ, இமெயில் மூலமாகவோ இதனை அனுப்பலாம்.
நமது தோழர்கள் தம்மிடம் நிலுவையில் இருக்கும் பிரச்சினைகளை உடனடியாக குறிப்பிட்ட படிவத்தில் தயார் செய்து அனுப்பும்படி கேட்டுக்கொள்கிறோம்.
தோழமையுடன்
ஆர். ராஜசேகர்
மாநிலச் செயலாளர்
25 6 24
0 Comments