Latest

10/recent/ticker-posts

கோவை மாவட்டம் மதுக்கரை கிளை பொதுக்குழு கூட்டம் - 28.06.24.

 கோவை மாவட்டம் மதுக்கரை கிளை பொதுக்குழு கூட்டம் - 28.06.24.



தோழர்களே !!

  28.06.24 அன்று கோவை மதுக்கரை கிளை கூட்டம் பாலக்காடு தோழர்கள் பாலக்காடு கேஜி போஸ்  பவன்  சங்கக் கட்டிடத்தில் கிளை தலைவர் தோழர்.  ஆறுமுகம் அவர்கள் தலைமையில் 30க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்ட கிளை பொதுக்குழு கூட்டமாக நடைபெற்றது. தோழர் சுப்பிரமணியம் அஞ்சலி நடத்தினார். அடுத்து கிளைச் செயலாளர் சசிதரன் வரவேற்புரை நிகழ்ச்சி நடத்தினர். 

      தொடர்ந்து பாலக்காட்டு மாவட்ட செயலாளர் தோழர். ராஜன் அவர்கள் உரையாற்றினார். அவரைத் தொடர்ந்து AIBDPA மாநில அமைப்பு செயலாளர் தோழர. T. K. பிரசன்னா அவர்கள் சிறப்புரையாற்றினர். பென்ஷனுக்கான நமது போராட்டம் பற்றியும் விளக்க உரையாற்றினார். தொடர்ந்து மாவட்ட செயலாளர் தோழர. A. குடியரசு  உரையாற்றும்போது கோவை மாவட்ட சங்க செயல்பாடு, பாண்டிச்சேரியில் நடந்த தமிழ் மாநில செயற்குழு முடிவுகள், பொதுச் செயலாளர் தோழர் KGJ நமக்கு கூறிய அறிவுரைகள் அனைத்தையும் எடுத்துரைத்தார் .

              அடுத்து கோவை மாவட்ட பொருளாளர் தோழர். N.P. ராஜேந்திரன்  CGHS  சம்பந்தமான பிரச்சனைகளை சுட்டிக்காட்டினார்.

           இறுதியாக கிளை பொருளாளர் தோழர். ரவீந்திரன் நன்றி கூறி  கூட்டத்தை நிறைவு செய்தார்.

A.குடியரசு மாவட்ட செயலாளர் கோவை மாவட்டம்

Post a Comment

0 Comments