சிறப்பாக நடைபெற்ற AIBDPA திருச்சி மாவட்ட முசிறி கிளை மாநாடு - 23.06.2024 .
AIBDPA திருச்சி மாவட்டமுசிறி கிளை மாநாடு 23.06.2024 அன்று சிறப்பாக நடைபெற்றது. குளித்தலை முசிறியை உள்ளடக்கிய முசிறி கிளை மாநாடு இன்று தோழர் P. கிருஷ்ணன் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. கிளைச் செயலாளர் தோழர். K. பன்னீர்செல்வம் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்.
திருச்சி மாவட்டச் செயலாளர் (பொறுப்பு) தோழர். A.இளங்கோவன் அவர்கள் மாநாட்டை துவக்கி வைத்தார். மாவட்டத் தலைவர் தோழர. I. ஜான் பாட்ஷா அவர்களும், திருச்சி மேற்கு கிளை செயலாளர் தோழர். D. Rukmangathan அவர்களும், கிளை மாநாட்டை வாழ்த்தி பேசினார்கள்.
கிளை மாநாட்டில் புதிய நிர்வாகிகளாக தோழர் K.பன்னீர்செல்வம் கிளை தலைவராகவும், தோழர். P. கிருஷ்ணன் கிளைச் செயலாளராகவும், தோழியர். விஜயலட்சுமி கிளைப் பொருளாளராகவும் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர். இறுதியாக தோழியர் Vijayalakhsmi அவர்கள் நன்றி கூறி மாநாட்டை முடித்து வைத்தார்.
முசிறி கிளை புதிய நிர்வாகிகளுக்கு AIBDPA திருச்சி மாவட்ட சங்கம் மற்றும் மாநில சங்கத்தின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.
தோழமையுடன்A.இளங்கோவன்
மாவட்ட செயலாளர் (பொறுப்பு)
AIBDPA. திருச்சி.
0 Comments