விரிவடைந்த கடலூர் மாவட்ட செயற்குழு கூட்டம் நேற்று (02.06.2024) மாவட்ட தலைவர் தோழர்.N.மேகநாதன் தலைமையில் விழுப்புரத்தில் நடைபெற்றது. மாவட்ட உதவிச் செயலர் தோழர். A. அண்ணாமலை அஞ்சலிவுரை ஆற்றினார். மாவட்ட செயலர் தோழர். I.M.மதியழகன் வரவேற்புரை நிகழ்த்தினார்.
செயற்குழுவிற்கான அஜெண்டா ஒப்புதல் பெறப்பட்டது.பின்னர் மாவட்ட செயலர் செயல்பாட்டு அறிக்கையை சமர்ப்பித்தார். அறிக்கை மற்றும் அஜெண்டா மீது 11 தோழர்கள் கருத்துக்களை தெரிவித்தனர். விவாதத்தில் தோழர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு மாவட்ட செயலர் விளக்கமளித்து விவாதத்தை முடித்து வைத்தார்.
AIBDPA மாநில துணைத்தலைவர் தோழர். P. மாணிக்கமூர்த்தி பென்சன் மாற்றம் பிரச்சினையில் நமது நிலைபாடு, நடைபெறவுள்ள Joint Forum இயக்கங்கள், நீதிமன்ற வழக்கின் தற்போதைய நிலை, நோஷனல் இன்கிரிமென்ட் பிரச்சினையில் பென்சன் இலாக்காவின் குழப்பமான நிலைபாடு, தனிநபர் பிரச்சினை தீர்வில் ஏற்படும் காலதாமதம் ஆகியவை குறித்து விரிவாக விளக்கி நிறைவுரையாற்றினார்.
எடுக்கப்பட்ட முடிவுகள்
1. 2024 ஆகஸ்ட் மாத இறுதியில் கடலூர் மாவட்ட மாநாடு விழுப்புரத்தில் வைத்து நடைபெறும்
2. மாவட்ட மற்றும் மாநில மாநாட்டு நன்கொடையாக ஓய்வூதியர்கள் ரூ.1000/- குடும்ப ஓய்வூதியர்கள் ரூ.700/- வழங்கிட வேண்டும்.
3. மாவட்ட மாநாட்டிற்கு ஸ்பான்சர் செய்ய விரும்பும் தோழர்கள் மாவட்ட செயலரை தொடர்புகொண்டு தெரிவிக்கலாம்.
4. கிளைக்கூட்டங்களை மூன்று மாதத்திற்கு ஒரு முறை கூட்ட வேண்டும்.
மாவட்ட மாநாட்டிற்கு காலை சிற்றுண்டியை சிதம்பரம் தோழர் M.காமராஜ் அவர்களும், சால்வைக்கான செலவினை கள்ளக்குறிச்சி தோழர் V.காமராஜ் அவர்களும், குடிநீர் பாட்டில் செலவினை அரகண்டநல்லூர் தோழர்கள் D.பொன்னம்பலம், R.ஏழுமலை ஆகியோரும் ஸ்பான்சர் செய்வதாக உறுதியளித்தனர். அவர்களுக்கு நமது நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.
இறுதியில் மாவட்டப் பொருளாளர் தோழர். B. சந்திரசேகரன் நன்றி கூறினார்.
விரிவடைந்த மாவட்ட செயற்குழுவை சிறப்பாக நடத்திய விழுப்புரம் கிளைச்சங்க தோழர்களுக்கும், செயற்குழு கூட்டத்தில் கலந்துகொண்ட தோழர்களுக்கும் மாவட்ட சங்கம் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
விரிவடைந்த மாவட்ட செயற்குழு முடிவுகளை அமுலாக்கிட அனைவரும் இணைந்து செயல்படுவோம்.
தோழமையுடன்,
I.M.மதியழகன்
மாவட்ட செயலர்.
கடலூர் மாவட்டம்.
0 Comments