Latest

10/recent/ticker-posts

வெகு சிறப்பாக நடைபெற்ற AIBDPA சேந்தமங்கலம் கிளை கூட்டம்.

 வெகு சிறப்பாக நடைபெற்ற AIBDPA சேந்தமங்கலம் கிளை கூட்டம்.



                            இன்று (16/06/2024) சேந்தமங்கலம் கிளையின் மாதாந்திரக் கூட்டம் தோழர். P. முத்து அவர்கள் தலைமையில் நடைபெற்றது. அஞ்சலி உரையை தோழர். R. செல்வராஜ் BT அவர்களும் வரவேற்புரையை தோழர் A. அங்குராஜ் BS அவர்களும் நிகழ்த்தினார்கள். வரவேற்புரையின் போது கிளையின் செயல்பாடுகள் குறித்தும் மாவட்ட அளவில் நடைபெற்ற வேலைகள் குறித்தும் கிளைச் செயலர் கூறினார்.

         சிறப்புரை நிகழ்த்திய தோழர் S.அழகிரிசாமி ADS அவர்கள் தனது உரையில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் பற்றியும், AIBDPA மாவட்டசங்கத்தின் செயல்பாடுகள் குறித்தும் விளக்கமாக பேசினார்*

தோழர் கனகராஜ் கூட்டத்துக்கு வந்திருந்த அனைவருக்கும் நன்றி கூறினார். கூட்டத்தில் 15 தோழர்கள் கலந்துகொண்டனர். சேந்தமங்கலம் தோழர்களுக்கு மாவட்ட சங்கத்தின் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.

தோழமையுள்ள
S. தமிழ்மணி DS AIBDPA

சேலம் மாவட்ட சேந்தமங்கலம் கிளை செயல்பாட்டிற்கு மாநில சங்கத்தின் வாழ்த்துக்கள்👍 பாராட்டுக்கள்💐
ஆர் ராஜசேகர்
மாநிலச் செயலாளர்.

Post a Comment

0 Comments