தோழர்களே!
வேலூர் மாவட்ட AIBDPA வின் மாவட்ட செயற்குழு கூட்டம் 30.05.2024 வியாழனன்று வெற்றிகரமாக நடைபெற்றது. கூட்டத்திற்கு தோழர் C. ஞானசேகரன், மாவட்ட தலைவர் தலைமையேற்றார். தோழர் வி ஏழுமலை, மாவட்ட செயலாளர் வரவேற்பு உரையாற்றி வேலை அறிக்கையையும் சமர்ப்பித்தார்.
மாவட்ட மாநாட்டினை தோழர் பொன்.லோகநாதன், மாநில துணைத்தலைவர் அவர்கள் துவக்கி வைத்து உரையாற்றினார். பென்ஷன் ரிவிஷனின் இன்றைய நிலை, பென்ஷன் மற்றும் மெடிக்கல் அதாலத் பற்றிய விவரங்கள், சொசைட்டி பிரச்சனையின் இன்றைய நிலை, ID கார்டு மற்றும் கேவிபி பிரச்சனைகள் ஆகியவற்றை விளக்கிப் பேசினார். மாவட்ட செயற்குழுவை வாழ்த்தி தோழர். B. மாரிமுத்து, மாவட்டச் செயலாளர், BSNLEU மற்றும் என்சிசிபிஏ மாவட்ட செயலாளர் தோழர். C.தங்கவேலு ஆகியோர் வாழ்த்திப் பேசினர். அஜென்டா மீது எட்டு கிளைச் செயலாளர்கள் மற்றும் மாவட்டச் சங்க நிர்வாகிகள் பேசினர். செயற்குழுவின் முடிவில்
சொசைட்டி பிரச்சனையில் மாநில சங்கம் மேலும் அழுத்தமாக தலையிட வேண்டும் என்றும்,வேலூர் மாவட்ட மாநாட்டினை ஜூலை மாத கடைசியில் அல்லது ஆகஸ்ட் மாத துவக்கத்தில் நடத்துவது என்றும், மாநாட்டின் செலவுகளுக்காக உறுப்பினர்களிடமிருந்து தலா ரூபாய் 500 வசூலிப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது. நிலுவையில் உள்ள பிரச்சனைகளை தீர்ப்பதற்கு தொடர் முயற்சிகளை மேற்கொள்வது என்றும் மாவட்ட செயற்குழுவில் தீர்மானிக்கப்பட்டது. தோழர் வி ஏழுமலை மாவட்ட செயலாளர் தொகுப்புரையுடன் அவரே நன்றியும் கூறி மாவட்ட செயற்குழுவினை முடித்து வைத்தார். மாவட்ட செயற்குழுவில் சுமார் மூன்று தோழியர்கள் உட்பட சுமார் 60 பேர் கலந்து கொண்டனர்.
மாவட்ட செயற்குழு வெற்றிகரமாக நடக்க உதவிய அனைத்து தோழர்களுக்கும் நன்றி.
இப்படிக்கு
தோழமையுள்ள
V. ஏழுமலை
மாவட்டச் செயலாளர்.
0 Comments