கோவை மாவட்டம் கணபதி கிளையின் பொதுக்குழு கூட்டம்
தோழர்களே !!
27.06.24 அன்று 25க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்ட கணபதி கிளையின் (கோவை மாவட்டம்) பொதுக்குழு கூட்டம் கிளை தலைவர் தோழர். K. சந்திரசேகன் அவர்கள் தலைமையில் சிறப்பான முறையில் நடைபெற்றது. தோழர். சசிகுமார் அஞ்சலி நிகழ்ச்சி நடத்தினார் . கிளைச் செயலாளர் தோழர். சந்திரன் அனைவரையும் வரவேற்று பேசினார். கிளைத் தலைவர் தலைமை உரையில் இன்றைய அரசியல் சூழ்நிலை பற்றி எடுத்துரைத்தார்.
அடுத்து மாவட்ட செயலாளர் தோழர். A.குடியரசு புதுவையில் நடைபெற்ற மாநில செயற்குழு பற்றியும், கோவை மாவட்டச் சங்க செயல்பாடு பற்றியும் உரை நிகழ்த்தினார். தொடர்ந்து மாநில உதவி தலைவர் தோழர். நிசார் அகமது புதுவை மாநில செயற்குழு மற்றும் சங்க செயல்பாடுகள் பற்றி உரையாற்றினார். அதைத் தொடர்ந்து மாவட்ட பொருளாளர் N P.ராஜேந்திரன் சங்க செயல்பாடுகளை பற்றி விளக்க உரையாற்றினார்.
இறுதியாக கிளை பொருளாளர் தோழர். ராஜு நன்றி கூறி கூட்டத்தை நிறைவு செய்தார்
A.குடியரசு மாவட்ட செயலாளர் கோவை மாவட்டம்
0 Comments