சிறப்பாக நடைபெற்ற திருச்சி மாவட்ட செயற்குழு கூட்டம்
AIBDPA திருச்சி மாவட்ட செயற்குழு கூட்டம் 06. 06. 2024 அன்று மாவட்ட தலைவர் தோழர் I. ஜான் பாட்ஷா அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. மாநில அமைப்பு செயலாளர் தோழர் T. தேவராஜ் அவர்கள் அஞ்சலி உரை நிகழ்த்தினார். மாவட்ட செயலாளர் (பொறுப்பு) தோழர. A.இளங்கோவன் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தியதோடு இடைக்கால அறிக்கையையும் சமர்ப்பித்தார்.
அதைத் தொடர்ந்து மாநில தலைவர் தோழர். C.K.நரசிம்மன் அவர்கள் Pension அதாலத் & மெடிக்கல் பில், அலவன்ஸ் போன்றவை குறித்தும், மாநில பொருளாளர் தோழர். S. நடராஜா அவர்கள், Pension ரிவிசன் பற்றியும் சிறப்புரை ஆற்றினார்கள். அனைத்து செயற்குழு உறுப்பினர்களும் விவாதத்தில் பங்கு எடுத்தனர். அதைத்தொடர்ந்து ஐந்து பேர் அடங்கிய மாவட்ட மையம் அமைக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு அறிவியல் புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. vaaniyal பால பாடம், மற்றும் வானியல் வினாக்களும் விடைகளும் என்ற இரண்டு புத்தகங்களை மாநிலத் தலைவர் தோழர் C.K.நரசிம்மன் அவர்கள் வெளியிட, அதை மாநில பொருளாளர் தோழர் S.நடராஜா, அவர்கள் பெற்றுக் கொண்டார்கள்.
இறுதியாக மாவட்டப் பொருளாளர் தோழர். L.அன்பழகன நன்றி கூறி மாவட்ட செயற்குழுவை முடித்து வைத்தார்.
தோழமையுடன்,
A.இளங்கோவன்
மாவட்ட செயலாளர் (பொறுப்பு) *AIBDPA.
திருச்சி*.
0 Comments