நெல்லையில் BSNLEU, AIBDPA மற்றும் SNATTA ஆர்ப்பாட்டம் 13-06-2024.
வணக்கம் தோழர்களே...!!!
BSNLEU மற்றும் SNATTA சங்கங்கள் இணைந்து 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 13-06-2024 அன்று மதியம் 1.30 மணியளவில் நெல்லை,வண்ணாரப்பேட்டை GM அலுவலகத்தில் வைத்து உணவு இடைவேளை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அதற்கு ஆதரவாக நமது AIBDPA சங்கத்தின் சார்பில் மாவட்ட தலைவர் தோழர் M.கனகமணி, மாவட்ட செயலாளர் தோழர் S.முத்துசாமி, மாவட்ட பொருளாளர் தோழர் S.சங்கரநாராயணன், அகில இந்திய உதவி பொருளாளர் தோழியர் V.சீதாலட்சுமி ,பாளையங்கோட்டை கிளை செயலாளர் தோழர் P.சூசை மற்றும் தென்காசி கிளை அமைப்பு செயலாளர் தோழர் S.வேலுச்சாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.
மாவட்ட செயலாளர் தோழர் S.முத்துசாமி மற்றும் அகில இந்திய உதவி பொருளாளர் தோழியர் V.சீதாலட்சுமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
நன்றி தோழர்களே.
தோழமையுடன்,ச.முத்துசாமி
மாவட்ட செயலாளர்
AIBDPA
நெல்லை மாவட்டம்.13-06-2024.
0 Comments