JOINT FORUM OF BSNL MTNL PENSIONERS ASSOCIATIONS NEW DELHI 15-06-2024
நம் ஓய்வூதிய சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில், புதிதாகப் பதவி ஏற்றுள்ள, தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் திரு. ஜோதிராதித்யா சிந்தியா அவர்களுக்கு கடிதம் தரப்பட்டுள்ளது.
புதிய பதவிக்கு வாழ்த்துகளுடன் தொடங்குகிறது கடிதம். தங்கள் தலைமையில் பிஎஸ்என்எல், எம்டிஎன்எல் வளர்ச்சி அடையும் என்று நம்புகிறோம் என்று ஆரம்பித்து, இந்தக் கூட்டமைப்பு 8 ஓய்வூதிய சங்கங்களின் ஒற்றுமையில் உள்ளதாகவும், கடந்த 7 ஆண்டுகளுக்கு மேல் எம் பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் உள்ளன என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தொடர்ந்து, அக். 22, 2022ல் 17 ஓய்வூதிய சங்கங்களுடன் DOT நிர்வாகம் நடத்திய பேச்சு வார்த்தைகளின் சிறப்பம்சங்கள் பட்டியல் இடப்படுகின்றன. பென்சன் டி லிங்க், 3வது PRC யின் படி பென்சன் மாற்றம், 2017 க்குப் பிறகு ஓய்வு பெற்றவர்களுக்கு நோஷனல் முறைப்படி பென்சன் விகிதம்* என விவரிக்கிறோம்.
21.03.2023 அன்று நடந்த பேச்சு வார்த்தை, 5, 10,15 விகிதத்தில் பென்சன் மாற்றத்தால் வரும் நிதித் தேவை, இவை CGCA வால் கணக்கிடப்பட்டு மத்திய அமைச்சருக்கு அனுப்பப்பட்டது என்பதையும் தெரிவிக்கிறோம்.
ஏப். முதல் வாரத்தில் அமைச்சர் முடிவெடுப்பார் என்று தெரிவித்ததையும், ஆனால் முடிவெடுக்கப்படவில்லை என்பதையும் கடிதத்தில் சுட்டிக் காட்டுகிறோம்.
நமது கோரிக்கை மிகவும் நியாயமானது என்றும், புதிய அமைச்சர் கூடிய விரைவில் இதில் முடிவெடுத்து, பிஎஸ்என்எல், எம் டி என் எல் ஓய்வூதியர்களின் மிகுந்த தாமதமான பென்சன் பிரச்சினையைத் தீர்த்து வைக்க வேண்டுமென கேட்டுள்ளோம்.
கடிதத்தில் நமது பொதுச் செயலர் உள்ளிட்ட 8 சங்கங்களின் தலைவர்கள் கையெழுத்திட்டுள்ளனர்.
தோழமையுடன்*ஆர். ராஜ சேகர்*
*மாநில செயலர்*
15.6.24
0 Comments