Latest

10/recent/ticker-posts

10.7.24ல் கோவை மாவட்ட SBC கிளைக் கூட்டம்.

 10.7.24ல் கோவை மாவட்ட SBC  கிளைக் கூட்டம்.



தோழர்களே!

            SBC கிளைத் தலைவர் தோழர். பொன்னுச்சாமி தலைமையில் 60க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டு  சிறப்பாக  நடைபெற்ற 10.7.24. SBC  கிளைக் கூட்டம். தலைவர் உரைக்கு  பின் தோழர். ராஜசேகரன் அஞ்சலி நிகழ்ச்சி நடத்தினார். தொடர்ந்து கிளைச் செயலாளர் அன்பழகன் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். 

          அடுத்து தோழர். வெங்கட்ராமன் AIOS அகில இந்திய சங்க செயல்பாடு பற்றியும், தோழர். பிரசன்னா COS மாநிலச் சங்க செயல்பாடுகள்  பற்றியும், கிளை பொருளாளர் தோழர். ராஜசேகரன்  கிளையின் நிதிநிலை அறிக்கையும் எடுத்துரைத்தனர். கிளை பொருளாளர் தோழர். ராஜசேகரன்  மாவட்ட மாநாட்டிற்கு ரூபாய் 3000 கிளை சங்கத்தின் சார்பில் முதன்முதலாக துவக்க நிகழ்ச்சியாக மாவட்ட பொருளாளரிடம் வழங்கினார்.

             மாவட்ட  செயலாளர் தோழர். A. குடியரசு மாவட்ட சங்க செயல்பாடு  பற்றியும், மாவட்டப் பொருளாளர் தோழர். N.P. ராஜேந்திரன் மற்றும் தோழியர் பங்கஜவல்லி Ex-AIAT ஆகியோர் வாழ்த்துச் செய்தியும் வழங்கினர். இறுதியாக தோழர். D.E.ஆறுமுகம் நன்றி கூறி கூட்டத்தை நிறைவு செய்தார்.

       மாவட்ட மாநாட்டுக்கு துவக்கமாக ரூபாய் 3000 வழங்கிய சாய்பாபா காலனி கிளைச்சங்க நிர்வாகிகளுக்கும் மற்றும் உறுப்பினர்களுக்கும் மாவட்ட சங்கத்தின் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்

A.குடியரசு மாவட்ட செயலாளர் கோவை மாவட்டம்

Post a Comment

0 Comments