Latest

10/recent/ticker-posts

அம்சமாக நடைபெற்ற 3வது உடுமலை கிளை மாநாடு

 அம்சமாக நடைபெற்ற கோவை மாவட்ட உடுமலை  3வது கிளை மாநாடு





     18.7.24 காலை சரியாக 11 மணிக்கு கிளையின் உதவி தலைவர் தோழர். ரவிச்சந்திரன் தலைமையில்  மாவட்டச் செயலாளர் தோழர் குடியரசு சங்க கொடி ஏற்றி வைக்க கோவை மாவட்ட உடுமலை கிளை மாநாடு துவங்கியது. 30க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டனர்.         

        அஞ்சலி நிகழ்ச்சியாக தோழர். வெங்கடேசன் நடத்தினார். தோழர். ரங்கசாமி அனைவரையும் வரவேற்று பேசினார். அடுத்து மாவட்ட செயலாளர் தோழர். A. குடியரசு  தனது துவக்க உரையில் மத்திய, மாநில ,மாவட்ட செயல்பாடுகள் பற்றி எடுத்துக் கூறி கிளை மாநாட்டை துவக்கி வைத்தார்.  அடுத்து கிளைமாநாட்டு செயல்பாட்டு அறிக்கையும், வரவு செலவு  விபரங்களும் பொது குழுவில் தாக்கல் செய்யப்பட்டது. 

          அடுத்து AIBDPA மாநில அமைப்பைச் செயலாளர் தோழர். T.K.பிரசன்னா  சிறப்புரை வழங்கினார். அவரது உரையில் ஓய்வூதியம் வந்த விதம், 3RD PRC சம்பந்தமான நமது சங்க நடவடிக்கை பற்றி எடுத்து வைத்தார். BSNLEU மாவட்டத் தலைவர் தோழர்.  கல்யாணராமன் மற்றும் TNTCWU கிளைச் செயலாளர்   தோழர். சிக்கந்தர் வாழ்த்துரை வழங்கினார்கள். தொடர்ந்து ஆண்டறிக்கை, வரவு செலவு கணக்கு ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. இக்கூட்டத்தில் புதிய உறுப்பினர்கள் நான்கு பேர் தங்களை இணைத்துக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது; வாழ்த்துக்குறியது. வாழ்த்துரை வழங்க வந்த அனைத்து தலைவர்களுக்கும் கதர் ஆடை  அணிவித்து கௌரவித்தனர். 

          கிளை நிர்வாகிகள் தேர்தலஐ மாவட்ட செயலாளர் நடத்தி வைத்தார். வரும் ஆண்டுக்கு கிளைத்தளவராக தோழர். ரவிச்சந்திரன் SDE RTD, கிளை ச்செயலாளராக தோழர். சின்னசாமி, கிளைப் பொருளாளராக தோழர். குணசேகரன், கௌரவ ஆலோசராக தோழர் சக்திவேல் மற்ற பதவிகளுக்கும் சேர்த்து 17 புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். தோழர்.  முகமது ஜாபர் மாநில அமைப்பு செயலாளர் தேர்வு செய்யப்பட்ட புதிய நிர்வாகிகளை வாழ்த்தியும்  சங்க நிகழ்பாட்டினை  எடுத்து  கூறி வாழ்த்து செய்தி  வழங்கினார். 

இறுதியாக தோழர்  கார்த்திகேயன் நன்றி கூறி  3வது கிளை  மாநாட்டை நிறைவு செய்தார்  செய்தார்.

A.குடியரசு மாவட்ட செயலாளர் கோவை மாவட்டம்

Post a Comment

0 Comments