Latest

10/recent/ticker-posts

தமிழ் மாநிலம் சுற்றறிக்கை 3/2024, 06.07.2024

தமிழ் மாநிலம் சுற்றறிக்கை 3/2024, 06.07.2024

NCCPA மாநில இணைப்புக்குழு முடிவுகள் !

                  NCCPA தமிழ்நாடு மாநில இணைப்புக்குழுக் கூட்டம் 5.7.2024 அன்று பூக்கடை  BSNLEU அலுவலகத்தில் மாநிலத் தலைவர் தோழர் P. மோகன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. கன்வீனர் தோழர் C.K. நரசிம்மன் அஜெண்டாவை முன் மொழிந்து பேசினார்.

             கூட்டத்தில் NCCPA அனைத்திந்திய துணைத் தலைவர் தோழர் R. இளங்கோவன், AIBDPA தமிழ்நாடு மாநிலச் செயலர் தோழர். R.ராஜசேகர், AIBDPA சென்னை தொலைபேசி மாநிலச் செயலர் தோழர் K. கோவிந்தராஜ், TN ITPU தலைவர் தோழர். மதிவாணன் உள்ளிட்டு உறுப்பு சங்கங்களின் முன்னணி தலைவர்கள்/ தோழர்கள்  பங்கேற்றனர். AIBDPA தமிழ் மாநில துணை தலைவர் தோழர். P. மாணிக்க மூர்த்தி கலந்து கொண்டார். 

NCCPA மாபொதுச்செயலர் தோழர் KR சிறப்பு அழைப்பாளராக கூட்டத்தில் பங்கேற்று NCCPA தேசிய செயற்குழுக் கூட்ட முடிவுகளை விளக்கி பேசினார்.

 கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் :

√ சென்னையில் நடைபெற்ற NCCPA 5வது அனைத்திந்திய மாநாட்டு வரவு-செலவுக் கணக்கு தணிக்கை செய்யப்பட்டு அடுத்த கூட்டத்தில் ஒப்புதலுக்காக வைக்கப்படும்.

  இதுவரையில் சென்னை உட்பட NCCPA மாவட்ட அமைப்பு உருவாகாத மாவட்டங்களில், அமைப்பை உருவாக்கிடும் பொருட்டு அனைத்து உறுப்பு சங்கங்களின் மாவட்ட பொறுப்பாளர்களின் பெயர்களை அந்தந்த மாநிலச் செயலர்களிடம் பெற்று தமிழ்நாட்டில் விடுபட்ட மாவட்டங்களில் NCCPA Adhoc body அமைக்கப்படும். பட்டியல் மாவட்டச் செயலர்களுக்கு அனுப்பப்பட்ட பின் NCCPA மாவட்ட உறுப்பு சங்கங்களின் ( AIPRPA / AIBDPA / DRPU / ITPU) பொறுப்பாளர்கள் கூடி மாவட்ட Adhoc bodyஐ உருவாக்க வேண்டும். இந்த பணியினை அக்டோபர் மாதத்திற்குள் முடிக்க வேண்டும்.

*NCCPA தமிழ்நாடு மாநில முதல் மாநாடு டிசம்பர் 2024 இறுதியில்* நடைபெறும்.

√ NCCPA திட்டமிட்டுள்ள அனைத்திந்திய இயக்கங்களை வெற்றிகரமாக அனைத்து பகுதிகளிலும் நடத்திட மாநில இணைப்புக்குழு முடிவெடுத்துள்ளது. NCCPA தலைமையகம் அனைத்து மட்டங்களுக்கும் அனுப்ப வேண்டிய Memorandumஐ இறுதிப்படுத்தி வெளியிட்ட பிறகு, *விரிவான சுற்றறிக்கையை மாநில இணைப்புக்குழு அனைத்து உறுப்பு சங்கங்களின் மாவட்டச் செயலர்களுக்கும் அனுப்பி வைக்கும்.* 

அதனடிப்படையில் இயக்கங்களை மாவட்ட அளவில் திட்டமிட்டு வெற்றியடையச் செய்யுமாறு  NCCPA மாநில இணைப்புக் குழு கேட்டுக் கொள்கிறது.

தோழமையுள்ள,
 P.  மோகன்
மாநிலத் தலைவர்
 C.K.நரசிம்மன் 
கன்வீனர்
 NCCPA மாநில இணைப்புக் குழு

Fwd 
R.ராஜ சேகர், மாநில செயலர்
6.7.24.

Post a Comment

0 Comments