Latest

10/recent/ticker-posts

தமிழ் மாநில சுற்றறிக்கை 5/2024 - 12.7.24

 தமிழ் மாநில சுற்றறிக்கை 5/2024 - 12.7.24

CCA-DOT திருமதி. மாதவி தாஸ் அவர்களுடன் அறிமுக சந்திப்பு. 11.7.24 



தோழர்களே, 

       தமிழ்நாடு CCA அலுவலகத்தில் புதியதாக பொறுப்பேற்று  இருக்கும் CCA திருமதி மாதவிதாஸ் அவர்களை தமிழ் மாநில சங்கத்தின் சார்பாக சந்தித்தோம். சந்திப்பின்போது மாநில தலைவர் தோழர்  C.K.நரசிம்மன், மாநிலச் செயலாளர் தோழர். R.ராஜசேகர் ஆகியோர் கலந்து கொண்டனர். 

                 CCA அவர்களுக்கு மாநில சங்கத்தின் சார்பில் சால்வை அணிவித்து கௌரவித்தோம். CCA அவர்களுடன் உரையாடல் சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்றது. பல விஷயங்கள் பேசப்பட்டிருக்கின்றன. அவர்களும் நம்முடைய பிரச்சனைகளை கூர்மையாக  கவனித்து அவற்றை தீர்த்து வைப்பதாக உறுதி அளித்துள்ளார்.  

          இவர் கர்நாடக மாநிலத்தின் CCA வாக பதவி வகித்தவர் மற்றும் கர்நாடக மாநில BSNLலில்  GM (TR)ராகப் பணியாற்றியவர். ஆகவே ஓய்வூதியர்களது பிரச்சினைகள் இவருக்கு நன்றாக தெரியும். கர்நாடக மாநிலத்தில் திறம்பட பணியாற்றியவர் என்று நமக்கு  தகவல். தமிழகத்திலும் பிரச்சனைகள் விரைவில் தீர்க்கப்படும்* என்பதனை அவர் உறுதியளித்திருக்கிறார். 

          நாம் அண்மை காலத்தில் Pr.CCA மற்றும் Jt.CCAகளோடு விவாதித்த பிரச்சனைகளை மீண்டும் இவரிடம் வலியுறுத்தி இருக்கிறோம்.

 குறிப்பாக 

1) ஓய்வூதியர்களுக்கு Authorisation வழங்கப்பட்டாலும் பென்ஷன் பட்டுவாடா செய்வதிலும், அதற்குப் பிறகு நிலுவைத் தொகை பட்டுவாடா செய்வதிலும் உள்ள காலதாமதத்தை எடுத்துரைத்துள்ளோம். 

2) Reauthorization பிரச்சனைகள் திருமணமாகாத பெண்கள், விவாகரத்து பெற்றவர்கள்,  கணவனை இழந்தவர்கள் போன்ற ஆதரவற்ற  பெண்களுடைய குடும்ப ஓய்வூதிய பிரச்சனையில்* விரைவாக தீர்வு காண கேட்டுக் கொண்டுள்ளோம். 

3) Despatch  sectionலில் இருந்து கடிதங்கள் அந்தந்த பகுதிக்கு செல்வதில் உள்ள குளறுபடியினை, காலதாமதத்தை விவரித்துள்ளோம். 

4) பென்ஷன் அத்தாரிட்டி வழங்கப்படும் போது அதனுடைய நகல் குடும்ப ஓய்வூதியர்களுக்கு தரப்பட வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளோம். 

5) பிறகு நீண்ட காலமாக நாம் பேசி வரும் LPD  பிரச்சனையை இவரது கவனித்துக் கொண்டு சென்று இருக்கிறோம். 

            CCA அவர்களும் அனைத்து பிரச்சனைகளையும் கூர்மையாக கவனித்து இவற்றையெல்லாம் உடனடியாக தீர்ப்பதற்கு வழி வகுப்பதாக உறுதி அளித்துள்ளார்.

 LPD  பிரச்சனையில் கூடுதல் கவனம்* செலுத்துவதாக உறுதியளித்தார். 

6) மேலும் CCA  அலுவலகத்தின் ஊழியர் பற்றாக்குறையையும்* அவரிடம் விவாதித்து இருக்கின்றோம்.

 ஆவண செய்வதாக உறுதியளித்துள்ளார். 

தோழர்களே,

CCA உடன் நடந்த சந்திப்பு திருப்திகரமாக இருந்தது. இவரிடம் பிரச்சனைகளில் சாதகமான, அணுகுமுறையை நம்மால் உணர முடிந்தது.

ஓய்வூதியர்களது பிரச்சனைகள் விரைவில் சுமூகமாக தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று நாம் எதிர்பார்க்கிறோம். 

BSNL COC அறைகூவல்

 மாவட்ட மட்டங்களில் ஆர்ப்பாட்டம்.19.7.24

தோழர்களே, 

           இதற்கான அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. நிர்வாகத்துக்கு கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் மரங்கள் வெட்டி களவாடப்பட்டதும், திருச்சியில் புதைக்கப்பட்ட கேபிள்கள் திருடப்பட்டுள்ளதும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. மாநிலத்தின் பல பகுதிகளில் இதுபோன்று நடப்பதாக தகவல் வருகின்றன. 

          ஆகவே, *BSNLEU, AIBDPA, TNTCWU இணைந்த தமிழக  BSNL ஒருங்கிணைப்பு குழு* இந்த பிரச்சனையில் நிர்வாகம் கவனம் செலுத்தி, நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று 19.07.2024 அன்று மாவட்டங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடத்த  அறைகூவல்  கொடுத்துள்ளது. 

மாவட்டச் செயலர்கள் COC சங்கங்களோடு இணைந்து பேசி ஒன்றுபட்ட இயக்கத்தை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கவும்.

 இதற்கான நோட்டீஸ் தயாரிக்கப்பட்டு  BSNLEU மாவட்டச் சங்கங்களுக்கு அனுப்பப்படும். நம்முடைய தோழர்கள் அதைப் பெற்றுக் 

பஞ்சப்படி ஒரு சதவீதம் உயர்வு

தோழர்களே, 

1.7.24 முதல் பஞ்சப்படி ஒரு சதவீதம் உயர்த்தப்பட்டு 217.8 சதவீதமாக இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவு DPEயிடம் இருந்து எதிர்பார்க்கப்படுகிறது. 

தோழமை வாழ்த்துக்களுடன் 
*ஆர் ராஜசேகர்* 
*மாநில செயலாளர்*

12.7.24

Post a Comment

0 Comments