Latest

10/recent/ticker-posts

AIBDPA தமிழ் மாநிலம் சுற்றறிக்கை 1/2024

 AIBDPA தமிழ் மாநிலம் சுற்றறிக்கை 1/2024

எழுச்சியுடன், உற்சாகமாக நடைபெற்ற முதல் கட்ட போராட்டம் 02.07.2024



தோழர்களே,  

          BSNL-MTNL ஓய்வூதியர்களுக்கு பென்ஷன் ரிவிசன் கேட்டு இன்று 02.07.2024 அன்று கூட்டுப் போராட்டக்  குழு சார்பாக நடைபெற்ற தொலைத் தொடர்பு இலாகா மந்திரி மற்றும் DOT செயலர் ஆகியோருக்கு மகஜர் கொடுக்கும் கோரிக்கை நாள் போராட்டம் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் மிகச் சிறப்பாக எழுச்சியுடன் நடைபெற்றுள்ளது.

தமிழகத்தில் 14 மையங்களில் இந்த இயக்கம் வெற்றிகரமாக நடைபெற்றுள்ளது.

              திருச்சி, திருநெல்வேலி, நாகர்கோவில், ஈரோடு, சேலம், பாண்டிச்சேரி, கடலூர், வேலூர், மதுரை (விருதுநகர், காரைக்குடி உட்பட), தஞ்சை (கும்பகோணம் உட்பட), கோவை (குன்னூர் உட்பட), மற்றும் தர்மபுரி, தூத்துக்குடி, சென்னை CGM அலுவலகம் ஆகிய பகுதிகளிலும் 1800க்கும் மேற்பட்டோர்  எழுச்சியுடன் பங்கேற்ற இயக்கமாக இது நடைபெற்று உள்ளது என்பது பாராட்டுக்குரியது.

பல பகுதிகளில் BDPA(I), BSNLEU, TNTCWU சங்கத் தோழர்களும் பெருமளவில் கலந்து கொண்டுள்ளார்கள்.

அனைத்து மாவட்டங்களிலும் நமது தோழர்கள் GM அவர்களை சந்தித்து மகஜர் கொடுத்துள்ளனர்.

          சென்னை CGM அலுவலகத்தில் நடைபெற்ற போராட்டத்தில் AIPRPA மாநிலச் செயலாளர் தோழர் P.மோகன், அகில இந்திய பொருளாளர் தோழர் C.சேகர், NCCPA அகில இந்திய பொருளாளர் தோழர். G.குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர். CGM திரு. B. வெங்கடேஸ்வரலு அவர்களை மாநிலச் செயலர் தோழர். R.ராஜசேகர் மாநில தலைவர் தோழர். C.K. நரசிம்மன் சென்னை மாவட்ட துணைச் செயலாளர் தோழர். V. சுப்பிரமணியம் ஆகியோர் சந்தித்து மகஜர் கொடுத்தோம். அவர் பென்ஷன் பிரச்சினை குறித்தும் 80 வயதுக்கு மேல் கூடுதல் பென்ஷன் பெறுவது சம்பந்தமாகவும் நம்மோடு சிறிது நேரம் உரையாடினார். நம்முடைய கோரிக்கை வெற்றி பெற வாழ்த்துக்கள் தெரிவித்தார்.

         தமிழகம் முழுவதும் இந்தப் போராட்டத்தை வெற்றிகரமாக நடத்துவதற்கு முழுமையாக முயற்சி எடுத்துக் கொண்ட மத்திய சங்க நிர்வாகிகள், மாவட்ட செயலர்கள், மாநிலச் சங்க நிர்வாகிகள், சிறப்பு அழைப்பாளர்கள், கிளைச் செயலர்கள் அனைத்து மற்ற நிர்வாகிகள் அனைவருக்கும் மாநில சங்கத்தின் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.

இதே போல் அடுத்த கட்ட போராட்டங்களையும் வெற்றிகரமாக நடப்பதற்கு சபதமேற்போம்.💪

தோழமை வாழ்த்துக்களுடன்
ஆர் ராஜசேகர்
மாநிலச் செயலாளர்
2.7.24




 

The first phase of agitational program conducted with enthusiasm and confidence on 2.7.24 in Tamilnadu

 Comrades,
              Today on 2.7.24 on behalf of the joint forum demanding pension revision for BSNL-DOT pensioners on IDA scale from 1.1.2017 on 3rd PRC, the demand day sending memorandum the Minister of Telecom and DOT Secretary has been very well organized in all the districts of Tamil Nadu.

This movement has been successfully conducted in 14 centers in Tamil Nadu.

More than 1800 comrades participated in the movement in Trichy, Tirunelveli, Nagercoil, Erode, Salem, Pondicherry, Cuddalore, Vellore, Madurai (including Virudhunagar, Karaikudi), Thanjavur (including Kumbakonam), Coimbatore (including Coonoor), and Dharmapuri, Thoothukudi, Chennai CGM office.

BDPA(I), BSNLEU, TNTCWU union comrades have also participated in large numbers in many centres.

Our comrades have *met the GMs in all the districts* and submitted the memorandums.

In CGM Tamilnadu Office at Chennai, *AIPRPA State Secretary Com. P. Mohan, AIPRPA All India Treasurer Com. C. Shekhar, NCCPA All India Treasurer Com.  G.Kumar* and others participated and greeted the struggle. 

AIBDPA Circle Secretary R. Rajasekar Circle President Mr.  C.K.  Narasimhan Chennai District asst Secretary Comrade V.Subramaniam met CGM Tamilnadu Mr. B Venkateswaralu and handed over the memorandum.  He had a brief conversation with us on the issue of pension and getting additional pension beyond the age of 80.  He wished us success in our demand.

  Congratulations and Appreciation of the CHQ office bearers, District Secretaries, Circle office bearers, Special Invitees, Branch Secretaries, and all office bearers who have put in all their efforts to make this protest a success across Tamil Nadu.

Similarly, let's take a pledge to make the next phase of protests successful.

Best regards
R. Rajasekar
Circle Secretary
AIBDPA Tamilnadu
2.7.24

Post a Comment

0 Comments