Latest

10/recent/ticker-posts

AIBDPA தமிழ் மாநில சுற்றறிக்கை 2/2024, 5.7.24

AIBDPA தமிழ் மாநில சுற்றறிக்கை 2/2024, 5.7.24

Jt.CCA திருமதி கௌதமி பாலாசிங் அவர்களுடன் மாநிலச் சங்க நிர்வாகிகள் சந்திப்பு :

தோழர்களே !!

           Jt.CCA திருமதி கௌதமி பாலாசிங் அவர்களுடன் மாநிலத் தலைவர் தோழர். C.K. நரசிம்மன், மாநிலச் செயலாளர் தோழர். R. ராஜசேகர், மாநில துணைத்தலைவர் தோழர். P. மாணிக்கமூர்த்தி ஆகியோர் இன்று 05.07.2024 அன்று சந்தித்து பல்வேறு பிரச்சனைகள் குறித்து விவாதித்தனர்.

விவாதிக்கப்பட்ட பிரச்சினைகளும் முடிவுகளும் :

1) கோவை, மதுரை உள்ளிட்ட சில  மாவட்டங்களில் குடும்ப ஓய்வூதியர் பிரச்சனைகள் நீண்ட நாட்களாக தீர்க்கப்படாமல் உள்ளது. Authorise ஆன பிறகும் PDA பகுதியிலிருந்து பென்ஷன் பலன் ஓய்வுதியர்களுக்கு சென்றடைவதில் மிக நீண்ட காலதாமதம் உள்ளதை சுட்டிக்காட்டினோம். 

நாம் தொடர்ந்து விவாதித்து வந்த 11 பிரச்சனைகளை கடிதம் மூலமாக சுட்டிக்காட்டினோம். அவர்களும் அதனை உடனடியாக PDA அதிகாரிகளுக்கு அனுப்பி அதற்கு ஆவண நடவடிக்கை எடுப்பதற்கு உத்தரவு அளித்துள்ளார். 

ஒரு வார காலத்துக்குள் இந்த பிரச்சனைகள் தீர்க்கப்படும் என்று நமக்கு உறுதி அளித்துள்ளார். 

2) குடும்ப ஓய்வூதியர்களுக்கு ஓய்வூதியம் மாற்றப்பட்ட பிறகு Authorisation கடிதம் தரப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தினோம்.

நமது கோரிக்கையின் நியாயத்தை உணர்ந்து கொண்டு அதற்கு உடனடியாக ஏற்பாடு செய்வதாக Jt.CCA உறுதியளித்தார். 

3) CCA அலுவலகத்தில் Dy.CCA பதவி காலியாக உள்ளது. அது நிரப்பப்படவில்லை. அப்பதவி நிரப்பப்பட்டால் சங்கங்களுக்கு ஒரு நோடல் அதிகாரி போல் அவர் செயல்படுவார் என்பதை வலியுறுத்தினோம். 

அதையும் பரிசீலிப்பதாக உறுதி அளித்துள்ளார்கள். 

4) சிதம்பரம் (11.8.23) அதாலத்தில் நாம் எழுப்பிய LPD பிரச்சனை இன்னும் நிலுவையில் உள்ளது. DOTயின் பதிலுக்காக காத்திருக்கிறார்கள். 

நாம் பிரச்சனையை மீண்டும் வலியுறுத்தினோம். நம்மிடம் ஒரு சில தகவல்கள் கேட்கப்பட்டுள்ளன. அவற்றை  சேகரித்து கொடுப்போம். 

பிரச்சினையை தீர்ப்பதற்கு   DOT நிர்வாகத்தோடு பேசி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார்கள். 

5) நாம் கொடுத்த KYP விண்ணப்பங்கள் UPDATE செய்யப்பட்டு கொண்டிருக்கின்றன என்றும், விரைவில் அந்த பணி முடியும் என்றும் தகவல் தெரிவித்தார்.   

6) DOT ID கார்டுகள்  கொஞ்சம் கொஞ்சமாக விநியோகிக்கப்படும் என்பதையும் தகவலாக தெரிவித்தார்கள். 

7) இதுவரை 37 Co- Authorisation பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு இருக்கின்றன

இது நல்ல விஷயம் என்று இதற்கான பாராட்டுகளை நாம் தெரிவித்தோம். 

நாம் முன்வைத்த பல்வேறு பிரச்சனைகளும் தீர்க்கப்பட்டு இருக்கின்றன. 

8) அதேபோல் *Re-authorisation பிரச்சனைகள்* நிலுவையில் உள்ள அனைத்தும் விரைவில் தீர்க்கப்படும் என்றும் Jt.CCA உறுதியளித்தார். 

9) குடும்ப ஓய்வூதியர் Authorisation பிரச்சனைகள் 180 நிலுவையில் உள்ளது. இம்மாத இறுதிக்குள் 150 பிரச்சனைகள் தீர்க்கப்படும் என்று கூறியுள்ளார்கள். 

தோழர்களே !!

.         நாம் தொடர்ந்து Family பென்ஷன் Authorisation, Re-authorisation மற்றும் Co-authorisation ஆகிய பிரச்சினைகளை நிர்வாகத்தோடு தொடர்ந்து கடிதம் மூலமாகவும் பேச்சுவார்த்தை மூலமாகவும் விவாதித்து இருக்கின்றோம். நம்முடைய தொடர் நடவடிக்கைகளின் காரணமாக அந்த பிரச்சனைகள் எல்லாம் இன்றைக்கு முடிவுக்கு வரும் நிலை வந்துள்ளது. 

இது நமது தொடர் முயற்சிக்கு கிடைத்த வெற்றி.

நம்முடைய கோரிக்கைகளை புரிந்து கொண்டு நிர்வாகம் நடவடிக்கை எடுத்துக் கொண்டிருப்பதையும் நாம் பாராட்டுகிறோம். 

இது தொடர்பாக நிர்வாகம்  *மாதாந்திர பரிசீலனை* கூட்டமும் நடத்துகின்றார்கள் .

10) CGHS FMA  பட்டுவாடா, மற்றும் Arrears ஆகஸ்ட் இறுதிக்குள்* முடிந்துவிடும் என்று உறுதி அளித்துள்ளார்கள். 

11) ஊழியருடைய *குறைகளை கேட்பதற்கு புதியதாக இரண்டு whatsapp எண்கள்* தரப்படும். அவை விரைவில் நடைமுறைக்கு வரும் என்று உறுதி அளித்துள்ளார்கள். 

12) அதேபோல் *ஓய்வூதியர்களுக்கு e-PPO*  விரைவில் தரப்படும்.

13) PDA பகுதியில் ஏற்படும் காலதாமதத்தை* போக்குவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், 

14) ஊழியர் பற்றாக்குறை உள்ளதால் அவற்றை நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதற்கு சங்கமும் ஒத்துழைக்கும் என்றும் உறுதி அளித்து இருக்கின்றோம். 

தோழர்களே, 

நாம் இன்றைய கூட்டத்தில் பல்வேறு பிரச்சனைகளை முன் வைத்தோம். நிர்வாகம் அவற்றை உடனடியாக தீர்ப்பதாக உறுதி அளித்துள்ளார்கள். அவர்களும் பல தகவல்களை நம்மோடு பகிர்ந்து உள்ளார்கள்.

இன்றைய கூட்டம் ஒரு மணி நேரத்திற்கு மேல்* நடைபெற்றது. ஒரு பயன் உள்ள கூட்டமாக அமைந்தது.* 

தோழமை வாழ்த்துக்களுடன் 
ஆர் .ராஜசேகர்
மாநிலச் செயலாளர்

5.7.24

Post a Comment

0 Comments