Latest

10/recent/ticker-posts

AIBDPA சேலம் மாவட்ட செயற்குழு கூட்டம் 24.7.2024

 AIBDPA சேலம் மாவட்ட செயற்குழு கூட்டம் 24.7.2024





            AIBDPA சேலம் மாவட்ட சங்கத்தின் மாவட்ட மாநாட்டிற்கும் முன்னதான மாவட்ட செயற்குழு கூட்டம் இன்று (24.7.2024) சேலம் BSNLEU அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் தோழர். M. மதியழகன் தலைமை தாங்கினார். ADS தோழர். V. கோபால் வரவேற்புரை ஆற்ற, மாநில சங்க சிறப்பு அழைப்பாளர் தோழர். P. ராமசாமி அவர்கள் துவக்க உரை நிகழ்த்தினார்.

            தோழர்கள் E. கோபால் DS BSNLEU, K. ராஜன் DP TNTCWU ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். மாவட்டச் செயலரின் ஆண்டறிக்கை அறிமுக உரை, மாவட்டப் பொருளாளர் தோழர். மைக்கேல் ஆன்டனி அவர்களின் வரவு செலவு சமர்ப்பிப்பு ஆகியவற்றுக்குப் பிறகு விவாதம் நடைபெற்றது. அனைத்து கிளைச் செயலர்கள், நிர்வாகிகள் தோழர்கள் S. அழகிரிசாமி, B. தசுதாகரன், P. குமாரசாமி, P.A.ஆறுமுகம் , ACS தோழர் T. பழனி ஆகியோர் விவாதத்தில் பங்கேற்றனர்.

மாவட்டச் செயலரின் தொகுப்புரைக்கு பிறகு ஆண்டறிக்கை, வரவு செலவு ஏற்கப்பட்டது.

ஆறாவது மாவட்ட மாநாட்டை அதிக அளவு ஓய்வூதியர்கள் பங்கேற்கும் மாநாடாக சிறப்பாக நடத்துவது என்ற முடிவுடன் செயற்குழு நிறைவுற்றது.

மாநாட்டு வாழ்த்துக்களுடன்

S. தமிழ்மணி DS AIBDPA

Post a Comment

0 Comments