Latest

10/recent/ticker-posts

மாநில மாநாடோ என வியக்கும் வண்ணம் நடைபெற்ற AIBDPA சேலம் 6வது மாவட்ட மாநாடு !!!

 மாநில மாநாடோ என வியக்கும் வண்ணம் நடைபெற்ற AIBDPA சேலம் 6வது மாவட்ட மாநாடு !!!





தோழர்களே !!

              சேலம் மாநகர் YMCA ஹாலில் 26.7.2024 வெள்ளியன்று AIBDPA அமைப்பின் 6வது சஏலம் மாவட்ட மாநாடு காலை 1040 மணியளவில் கொடியேற்றத்துடன்  துவங்கியது. தோழர். R. குழந்தைவேலு AO Retd அவர்கள் தேசியக் கொடியையும், மூத்த தோழர். V. கோபால் ADS அவர்கள் AIBDPA வின் செங்கொடியையும் விண்ணதிரும் கோஷங்களுடன் ஏற்றிவைத்தனர்.

                மாவட்ட தலைவர் தோழர் M.மதியழகன் மாநாட்டிற்கு தலைமை தாங்கினார் . ராசிபுரம் கிளைச் செயலர் தோழர் P.M.ராஜேந்திரன் அஞ்சலி உரை ஆற்றினார். மாவட்ட உதவி செயலர் தோழர் S.அழகிரிசாமி வரவேற்புரை நிகழ்த்தினார்.


                 மாநிலச் செயலாளர் தோழர். R.ராஜசேகர் அவர்கள் சிறப்புரை ஆற்றினார். அவரது உரையில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கையையும், ஓய்வூதிய மாற்றத்தில் AIBDPA வின் மிகச் சரியான நிலைபாடு, அதில் நமது போராட்ட அணுகுமுறை, BSNL MRSல் நமது சாதனைகள், CGHSல் உள்ள குறைபாடுகள், அடுத்த நமது போராட்ட திட்டங்கள் ஆகியவை பற்றி விளக்கமாக எடுத்துக் கூறினார்.தோழர் N.குப்புசாமி CVP அவர்கள் நம் இயக்கம் வளர்ந்து வந்த பாதையினை கூறி வாழ்த்துரை வழங்கினார்.

BSNLEU மாவட்ட செயலர் தோழர் E.கோபால் அவர்கள் வாழ்த்துரை வழங்கி சேலத்தில் AIBDPA அமைப்பை மேலும் வலுவாக கட்டமைக்க உறுதியேற்று, பணி ஓய்வு பெற்றதால் இந்த மாநாட்டின் வாயிலாக AIBDPA விற்கு ஆயுள் சந்தா அளித்து உறுப்பினராக இணைத்துக் கொண்டார்.

தோழர்கள் R.மனோகரன் SNPWA, N.சண்முகம் NCCPA, நேதாஜி சுபாஷ் மத்திய மாநில பொதுத்துறை ஓய்வூதியர் ஒருங்கிணைப்புக் குழு, C.கமலக்கூத்தன் BDPA, M.செல்வம் TNTCWU, D. பாஸ்கர் DS DPI ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

உணவு இடைவேளைக்கு பிறகு துவங்கிய மாநாட்டில் தோழர்கள் P. ராமசாமி மா.ச.சி. அழைப்பாளர், S. ஹரிஹரன் ACS BSNLEU, R. ரமேஷ் COS BSNLEU ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

பின்னர் பொருளாய்வுக் குழுவினை தோழர் T.பழனி ACS அவர்கள் துவக்கி வைத்தார். மாவட்டச் செயலர் தோழர் S. தமிழ்மணி ஆண்டறிக்கையையும், மாவட்ட உதவிப் பொருளர் தோழர் K.M.செல்வராஜு வரவு செலவு கணக்கையும் மாநாட்டின் விவாதத்திற்கு முன் வைத்தனர். விவாதத்தில் 9 தோழர்கள் பங்கேற்றனர். மாவட்ட செயலரின் தொகுப்புரைப் பின்னர் ஆண்டறிக்கை, வரவு செலவு ஏற்கப்பட்டது.

மாநிலச் செயலர் நடத்திக் கொடுத்த புதிய நிர்வாகிகள் தேர்வில் மாவட்ட தலைவராக தோழர்.M.மதியழகன், மாவட்ட செயலராக தோழர் S.தமிழ்மணி, மாவட்ட பொருளாளராக தோழர் P. தஙகராஜு உள்ளிட்ட 17 நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். மாநாட்டில் ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்கள் 240 பேர் உட்பட 300க்கும் மேற்பட்ட தோழர்கள் பங்கேற்றனர்.

சேலத்தில் 26.7.2024ல் நடைபெற்ற AIBDPA மாவட்டச் சங்க மாநாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகள் பட்டியல்

மாவட்ட தலைவர்

 தோழர் M.மதியழகன் சேலம்

துணைத்தலைவர்கள்

1) தோழர் B.சுதாகரன் சேலம்

2) தோழர் K.ராமசாமி தி.கோடு

3) தோழர் T. பழனி சேலம்

4) தோழியர் மணிமேகலை ராஜசேகர் ராசிபுரம்

மாவட்ட செயலாளர் :

 தோழர் S.தமிழ்மணி தி.கோடு

உதவி செயலர்கள் :

1) தோழர் S.அழகிரிசாமி சேந்தமங்கலம்

2) தோழர் V.கோபால் நாமக்கல்

3) தோழர் P.குமாரசாமி ஆத்தூர்

4) தோழர் R.இளங்கோவன் சேலம்

5) தோழர் P.A. ஆறுமுகம் ராசிபுரம்

மாவட்ட பொருளாளர் :

தோழர் P.தங்கராஜு தி.கோடு

உதவி பொருளாளர் :

தோழர் K.M.செல்வராஜு நாமக்கல்

அமைப்பு செயலர்கள்

1) தோழர் மஹபூப்ஜான் நாமக்கல்

2) தோழர் C.மகேந்திரன் சேலம்

3) தோழர் S.சந்திரன் சங்ககிரி

4) தோழர் D.சரவணன் எடப்பாடி

மாவட்டச் சங்க சிறப்பு அழைப்பாளர்கள் :

1) தோழர் P.ராமசாமி நாமக்கல்

2) தோழர் V.பொன்னுவேல் சேலம்

3) தோழர் V.சின்னசாமி ஆத்தூர்

தணிக்கையாளராக தோழர். R. குழந்தைவேல் AO Retd நியமனம் செய்யப்பட்டார்.

மாநாடு சிறக்க அனைத்துப் பணிகளிலும் ஈடுபட்ட தோழர்கள் K. ராஜன், P. செல்வம், M.செல்வம், பத்மநாபன் கௌரவிக்கபட்டனர். தோழர். B. சுதாகரன் DVP அவர்கள் நன்றி கூற மாநாடு நிறைவுற்றது.

வாழ்த்துக்களுடன்
தோழமையுள்ள 
S. தமிழ்மணி

DS AIBDPA சேலம்

Post a Comment

0 Comments