AIBDPA தமிழ் மாநில சுற்றறிக்கை 9/24 dt.31.07.2024
மாநில மைய கூட்ட முடிவுகள் 31.7.24
தோழர்களே,
மாநில சங்கத்தின் மையக் கூட்டம் ஆன்லைன் மூலமாக 31.07.2024 அன்று காலை நடைபெற்றது. கூட்டத்தில் மாநில தலைவர் தோழர். C. K. நரசிம்மன், மாநில செயலாளர் தோழர். R. ராஜசேகர், மாநில பொருளாளர் தோழர். எஸ். நடராஜா மாநில துணைத்தலைவர் தோழர். பி. மாணிக்க மூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு தோழர். சி. கே. நரசிம்மன் மாநில தலைவர் தலைமை தாங்கினார்.
விவாதிக்கப்பட்ட பிரச்சினைகளும் எடுக்கப்பட்ட முடிவுகளும் :
1) கேரள வயநாடு பேரழிவு உதவி நிதி தொடர்பாக
கேரள மாநிலம் வயநாடு பகுதியில் தொடர் கன மழையின் காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டு 160 க்கும் மேற்பட்டோர் உயிர் இழந்திருக்கிறார்கள். அந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று சொல்லப்படுகிறது. இந்த நிலையில் உயிரிழந்த மக்களுக்கு நமது சங்கத்தின் சார்பில் அஞ்சலியை தெரிவிக்கிறோம்.
தங்களது உடமைகளையும் வாழ்வாதாரத்தையும் இழந்து பெரும் பாதிப்புக்கு உள்ளாகி வாடும் ஆயிரக்கணக்கான மக்களுக்கு அவர்களுடைய துயர் துடைக்க
நிதி உதவி செய்வதற்கு மத்திய சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
அதன் அடிப்படையில் நாம் உதவிக்கரம் நீட்ட வேண்டும். *மாவட்ட சங்கங்கள் உடனடியாக தங்கள் கையில் இருக்கும் நிதியில் ஒரு பகுதியை முதல் தவணையாக அவர்களுக்கு அனுப்பி வைக்கவும்*.
உறுப்பினரிடம் இருந்து பிறகு வசூலித்து இரண்டாவது தவணையாக நிதி அனுப்பி வைக்க வேண்டும்.
மாவட்டங்கள் தங்களுடைய உறுப்பினர்களின் *சக்திக்கு ஏற்றவாறு தாராளமாக நிதி அளிக்க வேண்டும்* என மாநில சங்கம் கேட்டுக்கொள்கிறது.
இது நமது தோழமை உணர்வை வெளிப்படுத்தும் தருணம். மிகப்பெரும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கும் வயநாடு மக்களுக்கு நாம் உறுதுணையாக நிற்போம்.
நிதி அளிக்க வேண்டிய கடைசி தேதி 10.8.24.
மாநிலச் சங்கம் முதல் தவணையாக ரூபாய். 10,000 (பத்தாயிரம்) உடனடியாக அனுப்புவதற்கு முடிவெடுத்துள்ளது.
தொடர் போராட்ட நிகழ்வுகள் இருக்கின்ற காரணத்தினால் மாநில சங்கத்திற்கு நிறைய செலவுகள் இருக்கிறது என்பதனை அனைவரும் அறிவோம்.
ஆகவே மாவட்ட சங்கங்கள் தாராளமாக நிதி வழங்க வேண்டும்.
நிதி அனுப்ப வேண்டிய வங்கி கணக்கு
A/c No.39251566695*
Name. Chief Minister's Distress Relief Fund
Branch: State Bank of India City Branch,Thiruvananthapuram.
IFSC SBIN0070028
2) பென்ஷன் பட்டுவாடா..வில் காலதாமதம்
மே, ஜூன் மாதங்களில் சரியாக வந்த பென்ஷன் இந்த மாதம் மீண்டும் பிரச்சனைக்கு உள்ளாகி (காலதாமதமாகி) இருக்கிறது. இதுவரை பலருக்கு பென்ஷன் கிடைக்கவில்லை (மதியம் ஒரு மணி) அஞ்சல் பகுதியில் யாருக்கும் வரவில்லை என்று தகவல்.
ஆகவே இது குறித்து மாநில சங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்கும் என்பதனை தெரிவித்துக் கொள்கிறோம். தொலைபேசி மூலமாகவும், கடிதம் மூலமாகவும் நிர்வாகத்திடம் தொடர்பு கொள்வோம்.
3) NCCPA இயக்கம் - 06.08.2024 - CGHS அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் & மகஜர் கொடுப்பது.
தோழர்களே,
இந்த இயக்கம் சென்னையில் நடைபெறுகின்ற காரணத்தினால் சென்னை தோழர்கள் மட்டும் இதில் கலந்துகொண்டால் போதும் என முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
CGHS அலுவலகம் இருக்கும் பெசன்ட் நகர் ராஜாஜி பவன் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ள காரணத்தால் இடம் மாற்றப்பட்டுள்ளது. ஆர்ப்பாட்டத்திற்கு பிறகு AD CGHS அவர்களை நேரில் சந்தித்து மகஜர் வழங்கப்படும்.
போராட்டம் நடைபெறும் இடம் அடையாறு தொலைபேசி நிலையம். காலை 10 மணி
சென்னை தோழர்கள் முழுமையாக கலந்து கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
தோழமையுடன்ஆர் ராஜசேகர்
மாநிலச் செயலாளர் 31.7. 24)
0 Comments