சேலம் மாவட்ட AIBDPA கிளைச் செயலர்கள் கூட்டம்
சேலம் மாவட்ட AIBDPA கிளைச் செயலர்கள் கூட்டம் இன்று (13.7.2024) BSNLEU அலுவலகத்தில் தோழர். B. சுதாகரன் DVP அவர்கள் தலைமையில் நடைபெற்றது. தோழர். T. பழனி ACS அவர்கள் கூட்டத்தை துவக்கி வைத்து உரையாற்றினார். மாவட்டச் செயலர் S.தமிழ்மணி 26.7.2024 நடக்க உள்ள மாவட்ட மாநாட்டை சிறப்பாக நடத்திட வேண்டியதன் அவசியத்தை எடுத்துக் கூறினார்.
BSNLEU மாவட்டச் செயலர் தோழர். E.கோபால், TNTCWU மாவட்டத் தலைவர் தோழர். K. ராஜன், BSNLEU ACS தோழர். S.ஹரிஹரன் ஆகியோர் AIBDPA மாவட்ட மாநாட்டினை எழுச்சியோடு நடத்திட ஆலோசனைகளை வழங்கி வாழ்த்துரை வழங்கினர்.
தோழர் S.அழகிரிசாமி ADS அவர்கள் துவக்கி வைத்த விவாதத்தில் அனைத்துக் கிளைச் செயலர்களும் பங்கேற்றனர். மாநாட்டு அழைப்பிதழ், AIBDPA கொடிகள் அனைத்துக் கிளைகளுக்கும் வழங்கப்பட்டது.
முடிவாக மாநாட்டு நிதி வசூலை அனைத்துக் கிளைகளும் முடிப்பது, ஓய்வூதியர்களை பெருந்திரளாக மாநாட்டிற்கு அழைத்து வருவது, வாகன ஏற்பாடு செய்து பெண் தோழர்களை அழைத்து வருவது போன்ற முடிவுகள் எடுக்கப் பட்டது.
வசூல் செய்த நிதியினையும், புதிய உறுப்பினர்களுக்கான சந்தா தொகையையும் கிளைச் செயலர்கள் வழங்கினர். இறுதியாக தோழர் P.தங்கராஜு அவர்கள் நன்றி கூற கூட்டம் நிறைவு பெற்றது
தோழமையுள்ளS.தமிழ்மணி DS AIBDPA
0 Comments