AIBDPA வேலூர் மாவட்டம் திருவண்ணாமலை கிளை சிறப்புக் கூட்டம்
தோழர்களே, வணக்கம்.🙏
நமது வேலூர் மாவட்டம் திருவண்ணாமலை கிளையின் சிறப்புக் கூட்டம் இன்று 04.07.2024 மாலை 4 மணியளவில் OCB தொலைபேசி நிலைய வளாகத்தில் நடைபெற்றது. தோழர். சேகர் கௌரவத் தலைவர் தலைமை தாங்கினார். தோழர். கிருஷ்ணன் கிளைச் செயலாளர் வரவேற்புரை நிகழ்த்தினார். தோழர். K. பழனி கிளை உறுப்பினர் சார்பாக பேசினர். தோழர். சரவணன் மாவட்ட உதவிச் செயலர் விளக்க உரையாற்றினார்
💐தோழர் ஏழுமலை மாவட்டச் செயலாளர் சிறப்புரை நிகழ்த்தினார். தோழர். சாமிக்கண்ணு கிளையின் புதிய உறுப்பினராக இணைந்தார். அவருக்கு மாவட்டச் செயலாளர் கதராடை அணிவித்து வரவேற்றார்.🪻வேலூரில் நடைபெற உள்ள மாவட்ட மாநாட்டிற்கு ஒவ்வொரு உறுப்பினரும் ரூ 500 நன்கொடையாக தர வேண்டுகோள் விடுத்தார்.
🍄🟫கிளையின் மூத்த உறுப்பினர் தோழர் கோபாலகிருஷ்ணன் முதல் உறுப்பினராக நன்கொடை அளித்தார். குடும்ப ஓய்வூதியர் தோழியர் சசிகலா மாவட்ட மாநாட்டுக்கு ரூ 2000 நன்கொடை வழங்கினார். கிளையில் வசூலான நன்கொடை ரூ. 5000 மாவட்ட செயலரிடம் முதல் தவணையாக வழங்கப்பட்டது.
🍄கிளையில் தீர்த்து வைக்கப்பட்ட பிரச்சனைகளைப் பற்றி தோழர் கிருஷ்ணன் விரிவாக எடுத்துரைத்தார். இறுதியில் தோழர் ராமலிங்கம் நன்றி தெரிவித்தார்.☘️கூட்டத்தில் சுமார் 25 தோழர்கள் கலந்துகொண்டனர். கலந்து கொண்ட அனைவருக்கும் கிளையின் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.🙏
தோழமையுடன்,
A கிருஷ்ணன் கிளைச் செயலர், AIBDPA திருவண்ணாமலை.
0 Comments