Latest

10/recent/ticker-posts

சிறப்பாக நடைபெற்ற கோவை மாவட்ட இராமநாதபுரம் கிளை கூட்டம்

 சிறப்பாக நடைபெற்ற கோவை மாவட்ட இராமநாதபுரம் கிளை கூட்டம் 





            இன்று கோவை மாவட்ட இராமநாதபுரம் கிளை கூட்டம்13.7.2024 காலை 11 மணிக்கு 30க்கும் மேற்பட்ட தோழர்கள்  கலந்து கொண்ட கூட்டமாக கிளைத் தலைவர் தோழர். அமலா விஜயா அவர்கள் தலைமையில் சிறப்பாக துவங்கியது.    கிளை  செயலாளர் தோழர்.  லியோ பிரான்சிஸ் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். 

         தொடர்ந்து பங்கஜவல்லி EX AIT  வாழ்த்துரை வழங்கினார்.  அடுத்து மாவட்ட செயலாளர் A.குடியரசு கூட்டத்தை ஊதுவக்கி வைத்து அகில இந்திய, மாநில, மற்றும் மாவட்ட சங்க செயல்பாடுகள் பற்றியும், புதுவையில் நடைபெற்ற தமிழ் மாநில செயற்குழு பற்றியும் விரிவாக எடுத்துரைத்தார். 

         அதைத்தொடர்ந்து தோழர். N. P. ராஜேந்திரன் மாவட்ட பொருளாளர் வாழ்த்துரை வழங்கினார்.  தோழர் ஜீவா நன்றி கூறி கூட்டத்தை நிறைவு செய்தார்

A.குடியரசு மாவட்ட செயலாளர் கோவை மாவட்டம்

Post a Comment

0 Comments