சிறப்பாக நடைபெற்ற தூத்துக்குடி மாவட்டச் செயற்குழு கூட்டம்
அன்புத் தோழர்களே ! வணக்கம்.
AIBDPA தூத்துக்குடி மாவட்டச் சங்க செயற்குழு கூட்டம் இன்று 13-07-2024ல் தூத்துக்குடி மாசிலாமணிபுரம் 3வது தெரு, தோழர். P C வேலாயுதம் அரங்கில் வைத்து தோழர். T. சுப்பிரமணியன் மாவட்டத் தலைவர் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. தோழர். K. சுப்பையா மாவட்ட உதவிச் செயலர் அஞ்சலி தீர்மானத்தை முன்மொழிந்தார். தோழர். V. குணசேகரன் மாவட்ட உதவிச் செயலர் வரவேற்புரை ஆற்றினார். தோழர். T. சுப்பிரமணியன் மாவட்டத் தலைவர் தலைமை உரையாற்றினார்.
அகில இந்திய உதவித் தலைவர் S. மோகன்தாஸ், துவக்க உரையாற்றினார். செயல்பாட்டு அறிக்கை முன் வைத்து மாவட்டச் செயலர் தோழர். P. ராமர் உரையாற்றினார். இன்றைய அளவில் மாவட்டத்தின் நிதிநிலை விபரங்களை முன்வைத்து மாவட்டப் பொருளாளர் தோழர் K.கணேசன் அறிக்கையிட்டார். விவாதத்தில் பல தோழர்கள் கலந்துகொண்டனர். மேலும் விடுபட்ட பிரச்சனைகளை முன்வைத்து கிளைச் செயலர்கள் பேசினர். விவாதங்களுக்கு விளக்கம் அளித்து மாவட்டச் செயலர் பேசினார். செயல்பாட்டு அறிக்கை, நிதிநிலை ஏகமனதாக ஏற்றிக்கொள்ளப்பட்டது.
மாவட்ட மாநாட்டை ஆகஸ்ட் செப்டம்பரில் மாநிலச் செயலரின் ஒப்புதலோடு நடத்துவது.
சென்னை டெல்லி போராட்டங்களுக்கு பெருவாரியான தோழர்களுடன் பங்களிப்பது.
மாவட்ட மாநாடு மாநில மாநாடு போராட்டங்களின் செலவினங்களை ஈடுசெய்ய உறுப்பினர்களிடம் ரூ.500/- நன்கொடை பெறுவது என்று தீர்மானிக்கப்பட்டது.
நன்கொடை அறிவித்தவுடன்
மாவட்டத் தலைவர் தோழர். T. சுப்பிரமணியன் ரூ.2000/- நன்கொடை வழங்கினார்.
தூடி மேற்கு பகுதி கிளைத் தலைவர் தோழர். பரமஹம்சர் ரூ.3000/- நன்கொடை வழங்கினார்.
தூடி மேற்கு பகுதி கிளைச் செயலர் தோழர். S. தளவாய் பாண்டியன் ரூ.1000/- நன்கொடை வழங்கினார்.
நன்கொடை வழங்கிய தோழர்களுக்கு நன்றி.
நிறைவாக மாவட்டப் பொருளாளர் தோழர் K.கணேசன் நன்றி கூற செயற்குழு நிறைவுற்றது.
தோழமையுடன்பெ.ராமர்
மாவட்டச்செயலர்
தூத்துக்குடி.
0 Comments