Latest

10/recent/ticker-posts

விருதுநகர் மாவட்ட செயற்குழு கூட்டம்

 விருதுநகர் மாவட்ட செயற்குழு கூட்டம் 16.0724


தோழர்கள் அனைவருக்கும் வணக்கம்.

   .                 நமது AIBDPA விருதுநகர் மாவட்டச் சங்கத்தின்  முதலாவது செயற்குழு கூட்டம் 16.07.2024 அன்று சிவகாசியில் தொண்டர் துரைசாமி நினைவு அரங்கில் மாவட்ட தலைவர் தோழர். செல்வராஜ் அவர்கள் தலைமையில் காலை 11.00 மணிக்கு சிறப்பாக ஆரம்பித்து மதியம் 02.00 மணி வரை நடைபெற்றது. தோழர். முத்துச்சாமி அஞ்சலி உரை நிகழ்த்தினார். மாவட்ட செயலாளர் தோழர். க.புளுகாண்டி வரவேற்புரை மற்றும் பாண்டிச்சேரி மாநில செயற்குழு முடிவுகள் பற்றி விளக்கினார்.  

         மாநில உதவி தலைவர் தோழர். M. பெருமாள்சாமி பென்சன் மாற்றம் பற்றி விளக்கவுரை நிகழ்த்தினார். பின்னர் அக்கூட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் கிளை செயலாளர்கள் உட்பட மொத்தம் 16 தோழர்கள் விவாதத்தில் பங்கேற்று நல்ல பல ஆலோசனைகளை வழங்கினார்கள். 

செயற்குழு முடிவுகள்:

1) பென்சன் மாற்றம் வேண்டி 27.08.2024 -ல் சென்னை CCA அலுவலகம் முன் நடக்கவுள்ள இரண்டாவது கட்ட போரட்டத்தில் அதிக தோழர்கள் பங்கேற்பது.

2)  12.11.2024 அன்று டெல்லி சந்தர்மந்தரில் நடக்கவுள்ள போராட்டத்திற்கு உடனே ரயில் பயணத்தை உறுதி செய்வது போன்ற முடிவுகள் எடுக்கப்பட்டன.

 CCA அலுவலக போராட்டத்தில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள தோழர்கள் மாவட்ட செயலாளர் அல்லது மாவட்ட பொருளாளர் அவர்களை தொடர்பு கொள்ளவும்.

 நன்றி.

தோழமையுடன் 
க.புளுகாண்டி
மாவட்ட செயலாளர் 

விருதுநகர்.

Post a Comment

0 Comments