Latest

10/recent/ticker-posts

15வது கிளையாக கோவை நகர மத்திய கிளை 10.8.24ல் உதயமானது

 15வது கிளையாக கோவை நகர மத்திய கிளை 10.8.24ல் உதயமானது





தோழர்களே !!

தமிழ் மாநிலத்தில் 118 வது கிளையும் கோவை மாவட்டத்தில் 15வது கிளை என்று 10.8.24 உதயமானது

       தோழர். பொன்னுசாமி SDE RTD SBC கிளைத் தலைவர் தலைமையில் 50க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டனர். அஞ்சலி நிகழ்ச்சியை  தோழர்.  ராஜசேகர்  SBC கிளை பொருளாளர்  நடத்தி வைத்தார்.  அதையடுத்து SBC கிளைச் செயலாளர் தோழர். அன்பழகன் அனைவரையும் வரவேற்று பேசினார். தொடர்ந்து மாவட்ட தலைவர் மாவட்ட செயலாளர் A.குடியரசு புதிய கிளை துவக்கத்தையும் அதன் அவசியத்தையும் பற்றி சங்கத்தின் கருத்துக்களை பதிவு செய்தார். அடுத்து அகில இந்திய அமைப்புச் செயலாளர் தோழர்V  வெங்கட்ராமன்* பென்ஷன் பற்றிய நமது அகில இந்திய சங்கத்தின் நிலைப்பாடு, நாம் நடத்தும் இயக்கங்கள் பற்றி எடுத்துரைத்து சிறப்புரையாற்றினார்.மாவட்டச் செயலாளர் புதிய கிளை நிர்வாகிகள் தேர்தலை நடத்தி முடித்தார்.

கிளைத் தலைவர் : G. குமரேசன் SDE RTD ஆண்டிபாளையம் பேரூர்

உதவி தலைவர்கள் :

1. தோழியர் சாவித்திரி வீரகேரளம்

2. Com.A.ராஜகோபால் வேடப்பட்டி 

3. Com.ராமகிருஷ்ணன் செல்வபுரம்  

4. தோழியர். ஜெயந்தி நடராஜன் வடவள்ளி

கிளைச் செயலாளர் : தோழர். N. பாலசுப்பிரமணியன் தொண்டாமுத்தூர்.

உதவிச் செயலாளர்கள் :

தோழர்கள்

1. முருக பூபதி செல்வபுரம்

2. J.கிருஷ்ணகுமார் பச்சாபாளையம்

3. ஜெயப்பிரகாஷ் பேரூர்

4. கிருஷ்ணசாமி சுண்டக்காமுத்தூர்

கிளைப் பொருளாளர் : S.பாலகிருஷ்ணன் வேடப்பட்டி

அமைப்புச் செயலாளர்கள் : தோழர்கள்

1. A.கருப்புசாமி தொண்டாமுத்தூர்

2. T.சரோஜா வடவள்ளி

3. T. குணமாலை வடவள்ளி

4. வசந்தராவேடப்பட்டி

5. P.மனோகரன் பேரூர் செட்டிபாளையம்

6. K. சேகர்  கோவை புதூர். ஆகிய தோழர்கள் ஏக மனதாக தேர்வு செய்யப்பட்டனர். 

தணிக்கையாளர் தோழர்.  M.வெங்கட்ராஜுலு நியமனம் செய்யப்பட்டார்.

தொடர்ந்து மாநில உதவி பொருளாளர் தோழர். B. நிசார் அகமது மற்றும் மாவட்ட உதவி தலைவர் தோழர். கே. சந்திரசேகரன் ஆகியோர்  தேர்வு செய்த புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்துரை வழங்கினர். இறுதியாக புதியதாக தேர்வு செய்யப்பட்ட கிளை பொருளாளர் தோழர். N. பாலசுப்ரமணியம் நன்றி கூறி கூட்டத்தை நிறைவு செய்தார் 

A.குடியரசு மாவட்ட செயலாளர் கோவை மாவட்டம்

Post a Comment

0 Comments