சிறப்பாக நடைபெற்ற வேலூர் மாவட்ட 5வது மாவட்ட மாநாடு.
தோழர்களே !!
. AIBDPA வேலூர் மாவட்டத்தின் ஐந்தாவது மாவட்ட மாநாடு 07.08.2024 அன்று வெகு சிறப்பாக நடைபெற்றது. தோர் C. ஞானசேகரன் அவர்கள் தலைமையில் துவங்கிய மாநாட்டில் தோழர் V.ஏழுமலை மாவட்ட செயலாளர் அவர்கள் வரவேற்புரை ஆற்ற மாநிலத் தலைவர் தோழர் C.K.நரசிம்மன் அவர்கள் துவக்கி வைத்தார்.
வேலூர் தொலைத்தொடர்பு மாவட்ட முதன்மைப் பொது மேலாளர் திரு. Srikumar, DGM F Shri Basak, DGM A மற்றும் DE Admin ஆகியோர் வாழ்த்திப் பேசினர். அதைத் தொடர்ந்து தோழமைச் சங்க தலைவர்கள் தங்களது வாழ்த்துரையை வழங்கினர். நமது மாநில செயலாளர் தோழர். ஆர். ராஜசேகர் அவர்கள் சிறப்புரையாற்றினார்.
மதிய இடைவேளைக்கு பின் விடுபட்ட தோழமைச் சங்க தலைவர்கள் வாழ்த்துரை வழங்கினர். மேலும் BSNLEU மாவட்ட செயலாளர் தோழர். B. மாரிமுத்து வாழ்த்திப் பேசினார். அதைத் தொடர்ந்து தோழர் சரவணன் மாவட்ட உதவி செயலர் அவர்கள் நன்றி கூற பொது அரங்கு நிறைவு பெற்றது. அதைத்தொடர்ந்து நடைபெற்ற பொருளாய்வு குழு கூட்டத்தில் மாவட்ட செயலாளர் தோழர். ஏழுமலை அவர்கள் செயல்பாட்டு அறிக்கையை சமர்ப்பித்தார். மாவட்ட பொருளாளர் தோழர் P. ஸ்ரீதரன் வரவு செலவு அறிக்கைகளை சமர்ப்பித்தார்.
இவை இரண்டும் ஏற்றுக் கொள்ளப்பட்ட பின் நடைபெற்ற நிர்வாகிகள் தேர்வில் தோழர் சி. ஞானசேகரன் அவர்கள் மாவட்டத் தலைவராகவும், தோழர். பி.முருகன் மாவட்ட செயலாளராகவும், தோழர். P. லோகநாதன் மாவட்ட பொருளாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மாநாட்டில் சுமார் 300க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டனர். மாவட்டப் பொருளாளர் தோழர். பி. ஸ்ரீதரன் அவர்கள் நன்றி கூற..மாநாடு இனிதே நிறைவுற்றது. மாநாட்டில் நமது பிரச்சனைகள் குறித்து ஐந்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாநாடு சிறப்பாக நடைபெற ஒத்துழைத்த அனைத்து தோழர்களுக்கும் நன்றி.
இப்படிக்கு தோழமையுள்ளபி முருகன்
மாவட்ட செயலாளர்.
0 Comments