Latest

10/recent/ticker-posts

AIBDPA TN சுற்றறிக்கை 11/2024,, dt.07.08.2024

 AIBDPA TN சுற்றறிக்கை 11/2024,, dt.07.08.2024

Jt.CCAவுடன் நடைபெற்ற இணையவழி கூட்ட-முடிவுகள்

"இனி வரும் மாதங்களில் ஓரிரு நாட்கள் முன்னதாகவே பென்சன் பட்டுவாடா"

தோழர்களே ! 

    இன்று 7.8.24 திருமதி. கௌதமி பாலஸ்ரீ Jt.CCA (Pension) அவர்களுடன் தமிழ்நாடு & சென்னை தொலைபேசி அனைத்து ஓய்வூதியர் சங்க மாநில செயலாளர்கள் பங்கேற்ற இணையவழி (online) கூட்டம் நடைபெற்றது. விரிவான விவாதங்களுக்குப்பின் Jt.CCA (PENSION) அவர்கள் கீழ்கண்ட உத்தரவாதங்களை அளித்துள்ளார்.

1) இனிமேல் தாமதத்திற்கு இடமளிக்காமல்,  பென்சன் பட்டுவாடா மாத கடைசி தேதிக்கு பதிலாக ஓரிரு நாட்கள் முன்னதாக பட்டுவாடா செய்யப்படும்.

2) IDA Arrears விடுபட்ட ஓய்வூதியர்கள் / குடும்ப ஓய்வூதியர்களுக்கு விரைவில் பட்டுவாடா செய்யப்படும்.

3) PENSIONER's ID CARD தயாரிக்க ஆகும் செலவிற்கான நிதி DOT யிலிருந்து வருவது தாமதமாவதால், ID Card கள் படிப்படியாக  வழங்கப்படும்.

4) ஆயிரக்கணக்கான ஓய்வூதியர் / குடும்ப ஓய்வூதியர்கள் மொபைல் எண்கள் Jt.CCA அலுவலகத்தில் பதிவு செய்யப்படாததால்  அவர்களுக்கு Life certificate கொடுக்குமாறு reminder கொடுக்க முடியாத நிலைமை உள்ளது. விடுபட்டவர்கள் விரைவாக பதிவு செய்யவும், Jt.CCA அலுவலகம் வெளியிடும் LC validity முடியவுள்ளோர் பட்டியலைப் பார்த்து ஓய்வூதியர் சங்கங்கள் அவர்களை LC ஐ சமர்பிக்கவும் உதவிடுமாறு கேட்டுக்கொண்டார்.

5) இறந்துவிட்ட ஓய்வூதியர்கள் spouse   குடும்ப ஓய்வூதியம் வழங்க கோரி வரப்பெற்ற சரியான  விண்ணப்பங்கள் அனைத்தும் அனுமதிக்கப்பட்டு விட்டன. அவர்களுக்கான குடும்ப ஓய்வூதியம் / நிலுவை விரைவில் பட்டுவாடா செய்யப்படும்

6) Reauthorisation கோரி விண்ணப்பித்த  ஓய்வூதியர்களின் தகவல்கள் portal லில் பதிவேற்றம் செய்யப்படும்.

7) 78.2% IDA பலன்கோரி வழக்கு போட்டவர்களில் தகுதியானோர் Declaration கொடுத்ததும் வழங்கப்படும்.

8) Commutation recovery 15 ஆண்டுக்குப் பின்பும் பிடிக்கப்பட்டோருக்கு திருப்பித்தரப்படும்.

9) IT பிடித்தோருக்கு  Form 16 portal ல் பதிவிடப்பட்டுள்ளது.

IT பிடிக்காதவர்களுக்கும் Form 16 வழங்குவது குறித்து மேல்மட்டங்களுக்கு சங்கங்கள் எடுத்துச் செல்லலாம்.

9) Date of Birth, Address மாற்றம் செய்ய Aadhar Card / PAN Card உடன் விண்ணப்பிக்கலாம். 

10) Pension Drawal Sectionக்கு கூடுதல் ஊழியர்களைப் பணியமர்த்த ஆவன செய்யப்படும்.

இன்றைய கூட்டத்தில் பல நல்ல முடிவுகள் தீர்மானிக்கப்பட்டுள்ளன.

அதே வேளையில், அவற்றை முழுமையாக அமுல்படுத்த வேண்டுமென்றும் கேட்டுக்கொள்கிறோம்

தோழமையுடன்
R.ராஜ சேகர்
CS AIBDPA TN 

7.8.24

Post a Comment

0 Comments