Latest

10/recent/ticker-posts

AIBDPA TN சுற்றறிக்கை 12/ 24 dt....24.8.24

AIBDPA TN சுற்றறிக்கை 12/ 24  dt....24.8.24

பென்ஷன் அதாலத் தஞ்சாவூர் 23.08.2024



தோழர்களே !

                    திருச்சி, தஞ்சை, கும்பகோணம் பகுதிகளுக்கான பென்ஷன் அதாலத் கூட்டம் தஞ்சையில் 23.8.24 அன்று நடைபெற்றது. 

         CCA நிர்வாகத்தின் தரப்பில்  Pr.CCA திரு.அவதேஷ் குமார், CCA திருமதி. இந்து மாதவி, Jt.CCAக்கள் திருமதி. கௌதமி பாலாசிங், திருமதி. அருள்மதி, திரு. ஷஜன் குமார் உள்ளிட்ட அதிகாரிகளும் ஊழியர்களும் கலந்து கொண்டனர்.

            AIBDPA தரப்பில் மாநில செயலர் தோழர் R. ராஜசேகர், மாநில பொருளாளர் தோழர் எஸ். நடராஜா, மாநில அமைப்பு செயலர் தோழர் M. குருசாமி, சிறப்பு அழைப்பாளர் தோழர் R.பக்கிரிநாதன், மாவட்ட செயலர்கள் தோழர். A. இளங்கோவன் (திருச்சி-பொறுப்பு), தோழர். K.மணிவண்ணன் (கும்பகோணம்), தோழர் S.N. செல்வராஜ் (தஞ்சை), திருச்சி மாவட்ட அமைப்பு செயலர் தோழர் C.ராமச்சந்திரன் உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொண்டனர். 

தோழர்களே, 

இந்த அதாலத்திற்கு 218 பிரச்சனைகள் தரப்பட்டிருந்தன. பெரும்பாலும் CGHS FMA சம்பந்தப்பட்டவை. அவற்றில் 185 தீர்க்கப்பட்டதாகவும், மீதமுள்ள பிரச்சினைகளில் சில நிர்வாக தரப்பிலும் சில பிஎஸ்என்எல் தரப்பிலும்,  இன்னும் சில பென்ஷனர் தரப்பிலும் நிலுவையில் இருப்பதாக தகவல் தரப்பட்டது.

 1) இந்த அதாலத்தில் தொடர்ந்து நாம் வலியுறுத்தி வரும் மாதம் தோறும் வழங்கப்படும் பென்ஷன் ஒன்று அல்லது இரண்டு நாட்கள் முன்னதாக  வழங்கப்படுவதற்கு  நிர்வாகம் உத்தவாதம் அளித்துள்ளது. 

இது ஒரு நல்ல விஷயம். நாம் எடுத்த தொடர் முயற்சிகளுக்கு கிடைத்த ஒரு பலன். 

2) DOTயின் ID கார்டுகள் ஆயிரம் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன. 3000 கார்டுகள் தயாராக உள்ளது. 

தோழர்களே, 

நமது சங்கத்தின் தரப்பில் மாநிலச் செயலாளர் பேசுகின்ற பொழுது கீழ்கண்ட பிரச்சனைகளை வலியுறுத்தி இருக்கிறோம்.

1) குடும்ப ஓய்வூதியம் Authorisation ஆன பிறகும் பென்ஷன் வழங்கப்படுவதிலும் நிலுவைத் தொகை வழங்குவதிலும் தொடர்ந்து காலதாமதம் நீடித்து கொண்டிருக்கிறது. இதனால் ஓய்வூதியர்களுக்கு பண பலன்கள் சென்றடைவதில்லை. இது உடனடியாக சரி செய்யப்பட வேண்டும். இந்த பிரச்சனைகளை நாங்கள் அனைத்து மட்டத்திலும் தொடர்ந்து பேசி வருகிறோம். இதில் பெரிய முன்னேற்றத்தை உணர முடியவில்லை என்று வலியுறுத்தினோம். 

2) Family pension Authorisation கடிதங்கள் குடும்ப ஓய்வுதிகளுக்கு அனுப்பப்பட வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறோம். 

3) ஏதேனும் நிலுவைத் தொகை கணக்கிடும் பொழுது, அந்த ஓய்வூதியரது  PPO  எண் முடக்கப்பட்டு, அந்த மாத பென்ஷன் வருவதில்லை என்கின்ற பிரச்சனை இருக்கிறது. இதை நிர்வாகம் உரிய முறையில் கவனிக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளோம்.

4) அதேபோல் ID கார்டுகளை பொருத்தமட்டில் குடும்ப ஓய்வூதியர்களுக்கு முன்னுரிமை தரப்பட வேண்டும். அவர்களுக்குத்தான் BSNL/DOT சம்பந்தமான எந்த ID கார்டும் கையில் இல்லை என்று வலியுறுத்தி இருக்கிறோம். 

5) பிறகு CCA அலுவலகத்தில் Despatch section பணிகள் முறைப்படுத்தப்பட/ துரிதப்படுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறோம். 

6) நீண்ட காலமாக நிலுவையில் உள்ள LPD பிரச்சினையையும் உடனடியாக தீர்த்து வைக்க வேண்டும் என்றும்  வலியுறுத்தி உள்ளோம்.

தோழர்களே, 

CCA அவர்கள் பேசுகின்ற பொழுது நம்முடைய கருத்துக்களை கணக்கில் கொள்வதாகவும் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளார். 

இந்த அதாலத்திற்கு நம்முடைய தரப்பில் ஆறு பிரச்சனைகள் மட்டும் தான் தரப்பட்டிருந்தன. அதில் இரண்டு பிரச்சனைகள் தீர்க்கப்பட்டுள்ளது. இரண்டு பிரச்சனைகள் மாவட்டத்தில் நிலுவையில் உள்ளது. மீதமுள்ள இரண்டு பிரச்சனைகள் பரிசிலிக்கப்பட்டு வருகிறது.

 தோழர்களே,

 ஒவ்வொரு அதால கூட்டத்தையும் நாம் முறையாக பயன்படுத்தி வருகிறோம். இந்த பணி தொடரும்.

இந்த அதாலத்தில் கலந்து கொள்வதற்கு திருச்சியில் இருந்து  வாகன வசதி செய்துதந்த திருச்சி மாவட்ட செயலாளர் (பொறுப்பு) தோழர். A. இளங்கோவன் அவர்களுக்கு நன்றி🙏 

அதாலத்தில் கலந்து கொண்ட நம்முடைய தோழர்களுக்கு உணவு ஏற்பாடு செய்து கொடுத்த தஞ்சை மாவட்ட செயலர் தோழர். S. N. செல்வராஜ் அவர்களுக்கும் மாநில பொருளாளர் தோழர். எஸ். நடராஜா அவர்களுக்கும் மாநில சங்கத்தின் சார்பாக நன்றி🙏

தோழமை வாழ்த்துக்களுடன் 
ஆர் ராஜசேகர் 
மாநிலச் செயலாளர்

24.8.24




Post a Comment

0 Comments