AIBDPA TN குறுஞ்செய்தி 12/2024, dt.10.8.24
கேரள மாநிலம் வயநாடு நிவாரண நிதி
தோழர்களே !!
வயநாடு நிவாரண நிதி கேட்டு மத்திய சங்கத்தின் வேண்டுகோளுக்கு இணங்க மாநில சங்கம் அறைகூவல் விடுத்திருந்தது. இதுவரை மூன்று லட்சத்து 50 ஆயிரத்துக்கு (ரூ.3,50,000) மேல் பணம் வசூலாகி அனுப்பப்பட்டிருக்கிறது.
பல மாவட்டங்கள் எதிர்பார்ப்பை மிஞ்சி மிக அதிகமான அளவில் நிதி வசூலித்து அனுப்பி இருப்பது உண்மையில் பாராட்டத்தக்கது. இது நம்முடைய வர்க்க உணர்வை பறைசாற்றுகிறது.
இன்னும் பல மாவட்டங்கள் வசூலித்துக் கொண்டிருக்கிறார்கள். விரைவாக அவற்றை அனுப்பி வைக்கவும்.
நமக்கு தொடர்ந்து பல பணிகள் இருக்கின்ற காரணத்தினால், நாம் ஆகஸ்ட் பத்தாம் தேதிக்குள் இந்த நிதி வசூலை முடித்து விட வேண்டும்.
இன்னும் ஒரு சில மாவட்டங்கள் இதுவரை ஏதும் அனுப்பவில்லை என்பது கவனத்திற்குரியது.
ஆகவே அனைத்து மாவட்டங்களும் உடனடியாக நிதி திரட்டலில் ஈடுபட வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
தோழமையுடன்ஆர் ராஜசேகர்
மாநில செயலாளர்
10.8.24
0 Comments