AIBDPA TN சுற்றறிக்கை 13/24 .... dt.29.8.24
BSNL MTNL ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு
CCA அலுவலகங்களில் முழு நாள் தார்ணா 05.09.2024
தமிழகR K நகர் தொலைபேசி இணைப்பகம், மந்தைவெளி, சென்னை
தோழர்களே,
59.24 அன்று சென்னை CCA அலுவலகம் முன் நடைபெறும் தார்ணா போராட்டத்தை சிறப்பாக நடத்துவதற்காக 27 8 24 அன்று சென்னையில் தமிழ் மாநிலம் மற்றும் சென்னை தொலைபேசி கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் நடைபெற்றது. நமது மாநில சங்கத்தின் சார்பில் மாநிலச் செயலாளர் தோழர் R.ராஜசேகர், மாநில தலைவர் தோழர் சி கே நரசிம்மன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் BDPA தோழர்களும் கலந்து கொண்டனர். மேலும் SNPWA தோழர்கள் தங்களால் கலந்து கொள்ள முடியாத காரணத்தால் எடுக்கப்படும் முடிவுகளுக்கு தங்களது ஒப்புதலை வழங்கி உள்ளனர்.
தோழர்களே,
இந்த கூட்டத்தின் முடிவின் அடிப்படையில் 5.9.2024 அன்று தார்ணா சென்னை மந்தைவெளியில் உள்ள R.K.mutt சாலையில் அமைந்திருக்கும் CCA அலுவலகம் முன்பாக காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை தார்ணா நடைபெறும். இந்த தார்ணாவில் AIBDPA, BDPA, SNPWA ஓய்வூதியர் சங்க தலைவர்களும், BSNLEU, FNTO, SNEA சங்கத் தலைவர்களும் சிறப்புரை ஆற்றுவார்கள்.
கூட்டத்தின் இடையே அகில இந்திய வழிகாட்டுதலுக்கு இணங்க Pr.CCA அவர்களிடம் மகஜர் வழங்கப்படும்.
இந்த தார்ணா போராட்டத்தை சிறப்பாக நடத்துவதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.
தோழர்களே, தமிழகத்தை பொறுத்தமட்டில் நம்முடைய தோழர்கள் தமிழகம் முழுவதும் இருந்து 180 க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொள்வதாக தகவல் வந்துள்ளது. கூட்டம் தள்ளிப்போன காரணத்தினால் ரயில் முன் பதிவு கிடைக்காமல் எண்ணிக்கை சற்று குறைந்திருக்கிறது. எனினும் 180 என்பதும் நல்ல எண்ணிக்கை தான்.
முதல் நாள் (4.9.24) வரும் தோழர்களுக்கு தங்குவதற்கும், 5ம் தேதி காலையில் வரும் தோழர்களுக்கு குளித்துவிட்டு காலை சிற்றுண்டிக்கும் மீனம்பாக்கம் RGMTTCயில் ஏற்பாடு செய்யப்படும். மதிய உணவு தார்ணா பந்தலில் வழங்கப்படும்.
தோழர்களே
தார்ணா போராட்டத்தை வெற்றிகரமாக்குவோம்.
அடுத்து 12.11.2024 டில்லி JF போராட்டத்தையும், 13.11.24 NCCPA டில்லி தார்ணா போராட்டத்தையும் வெற்றிகரமாக்குவோம்.
பென்ஷன் மாற்றம் பெறுகின்ற வகையில் நமது தொடர் போராட்டங்கள் தொடரும்.
தோழமை வாழ்த்துக்களுடன்ஆர் ராஜசேகர்
மாநிலச் செயலாளர்
29.8.24
0 Comments