AIBDPA TN குறுஞ்செய்தி 16/24 .. dt.30.08.2024
Pr.CCA மற்றும் CCA உடன் சந்திப்பு :
தோழர்களே !
நடைபெற இருக்கும் 5.9.24 CCA அலுவலக தார்ணா போராட்டத்திற்காக BSNL மற்றும் CCA அலுவலக அதிகாரிகளையும் சந்தித்து அனுமதி பெறுவதற்கான கூட்டு நடவடிக்கை குழு கடிதங்களை, மாநிலச் செயலாளர் தோழர்.R. ராஜசேகர் அவர்களும் சென்னை தொலைபேசி மாநிலச் செயலாளர் தோழர்.கே. கோவிந்தராஜ் அவர்களும் கொடுத்தோம்.
Pr.CCA திரு.அவதேஷ் குமார் அவர்களை சந்தித்து 5.9.24 அன்று மகஜர் அளிப்பதற்கான அனுமதியையும் பெற்றோம். உடன் CCA திருமதி இந்து மாதவி அவர்களும் உடன் இருந்தார்கள்.
இந்த தருணத்தில் கீழ்க்கண்ட இரண்டு முக்கியமான பிரச்சினைகள் குறித்தும் விவாதித்தோம்.
1) இம்மாத பென்ஷன் பட்டுவாடா தொடர்பாக, 27.8.24 ஆம் தேதியே Processing சென்டருக்கு பென்ஷன் தகவல்கள் அனுப்பப்பட்டதாகவும், 29ஆம் தேதி பென்ஷன் பட்டுவாடா செய்யப்படும் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது.
எனினும் பென்ஷன் 30 8 24 இன்று காலை முதல் தான் பட்டுவாடா செய்யப்பட்டு வருகிறது என்கின்ற தகவலை தெரிவித்தோம்.
தஞ்சை அதாலத்தில் இரண்டு நாட்களுக்கு முன்பாகவே பென்ஷன் பட்டு வாடா செய்யப்படும் என்று உறுதிமொழி கொடுக்கப்பட்டதை நினைவுபடுத்தினோம். வரக்கூடிய காலங்களில் முறைப்படுத்தப்படும் என்று உறுதி அளித்துள்ளார்கள்.
தோழர்களே, பென்ஷனை முறையாக பெறுவதற்கான நம்முடைய நடவடிக்கைகள் அனைத்து மட்டங்களிலும் தொடரும். நேரடி பேட்டிகள், அதாலத்துகள் மற்றும் கடிதம் மூலமாகவும் முயற்சிப்போம்.
பென்ஷனை முறையாக பெறுவதற்கான போராட்டத்தில் நாம் வெற்றி பெறுவோம்.
2) அடுத்து, குடும்ப ஓய்வூதியம் Authorisation ஆன பிறகு பென்ஷன் பட்டுவாடா செய்யப்படுவதிலும், பிறகு arrears பெறுவதிலும் உள்ள காலதாமதத்தை இருவரிடமும் எடுத்து வைத்தோம். தஞ்சை அதாலத்தில் இது தொடர்பாக நாம் முன்வைத்த கருத்துக்களை மீண்டும் வலியுறுத்தினோம். Pr.CCA அவர்கள் PDA Sectionக்கு என்று கூடுதலாக ஒரு Accounts officer போடுவதாகவும், இதன் மூலமாக இப்பிரச்சனை விரைவாக தீர்க்கப்படும் என்றும் உறுதி அளித்தார்கள்.
ஓய்வூதியர்களுக்கு குடும்ப ஓய்வூதியம் பெற்றுக் கொடுப்பதில் விடாப்படியாக முயற்சிகளை நாம் தொடர்ந்து எடுத்து வருகிறோம். இதிலும் நாம் முன்னேற்றம் காண்போம்.
தோழமை வாழ்த்துக்களுடன்ஆர் ராஜசேகர்
மாநிலச் செயலாளர்
30.8.24
0 Comments