AIBDPA சேலம் மாவட்ட செயற்குழு கூட்டம்
AIBDPA சேலம் மாவட்ட செயற்குழு கூட்டம் இன்று (21.8.2024) BSNLEU அலுவலகத்தில் வைத்து தோழர். B. சுதாகரன் DVP தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. தோழர். P. சம்பத் BS மெய்யனூர் அஞ்சலி உரைக்குப் பின் தோழர். S.அழகிரிசாமி ADS வரவேற்புரை நிகழ்த்தினார்.
மாநில சங்க சிறப்பு அழைப்பாளர் தோழர். P. ராமசாமி துவக்க உரை ஆற்றினார். தோழர்கள் K.R. கணேசன் NCCPA, E. கோபால் DS BSNLEU, M. செல்வம் DS TNTCWU, T. பழனி ACS ஆகியோர் வாழ்த்துரைக்குப் பின் ஆய்ப்படு பொருள் அறிமுக உரையை மாவட்ட செயலர் நிகழ்த்தினார்.
விவாதத்தில் கிளைச் செயலர்கள், மாவட்ட சங்க நிர்வாகிகள் முழுமையாக பங்கேற்றனர். ஆறாவது மாவட்ட மாநாடு மிக சிறப்பாக நடத்தி முடித்தது அனைவராலும் பாராட்டப்பட்டது. FMA பிரச்சினைகளை செயலர்கள் எடுத்துக் கூறினர். தொகுப்புரைக்கு பிறகு AIBDPA கிளை சங்கங்களுக்கு பொறுப்பாளர்களாக மாவட்ட சங்க நிர்வாகிகள் முடிவு செய்யப்பட்டது.
5.9.2024 ல் CCA அலுவலக போராட்டத்தில் சேலத்திலிருந்து 20 க்கும் மேற்பட்ட ஓய்வூதியர்கள் கலந்து கொள்வது என தீர்மானிக்கப்பட்டது. மாவட்ட மாநாட்டு நிதி, வயநாடு வெள்ள நிவாரண நிதி ஆகியவற்றிற்கு வசூலில் ஈடுபட்ட கிளைகளுக்கு நன்றி தெரிவிக்கப் பட்டது.
இறுதியாக தோழர் P.தங்கராஜு மாவட்ட பொருளாளர் நன்றி கூற செயற்குழு நிறைவுற்றது.
தோழமையுள்ள,S. தமிழ்மணி DS AIBDPA சேலம்
0 Comments