Latest

10/recent/ticker-posts

குமரி மாவட்ட குழித்துறை கிளை பொதுக்குழு கூட்டம்

 குமரி மாவட்ட குழித்துறை கிளை பொதுக்குழு கூட்டம்




தோழர்களுக்கு வணக்கம். 

        குமரி மாவட்ட குழித்துறை கிளை பொதுக்குழு கூட்டம் இன்று 10.8.24ல் தக்கலையில் வைத்து மிக சிறப்பாக நடைபெற்றது. தோழியர். K. காளி பிரசாத் தலைமை தாங்கினார். கிளை செயலாளர் தோழர். K. வேலப்பன் அனைவரையும் வரவேற்று செயலர் உரை ஆற்றினார். தோழர்கள் அ. மீனாட்சி சுந்தரம் மாவட்ட தலைவர், C பழனிச்சாமி மாவட்ட உதவி செயலாளர் ஆகியோர் அகில இந்திய சங்க அறைகூவல்,  போராட்டங்கள், நமது கடமை பற்றி விளக்கமாக பேசினார். 

தோழர். C. ஆறுமுகம் உதவி கிளை செயலாளர் மற்றும் கிளை தலைவர் C. செல்வதுரைராஜ் ஆகியோர் கிளை வளர்ச்சி உறுப்பினர் பங்களிப்பு பற்றியும் மக்கள் ஒற்றுமை பற்றியும் பேசினார். 

               முடிவாக அக்டோபர் முதல் வாரத்தில் நடைபெற உள்ள மாவட்ட மாநாடு சிறப்பாக நடைபெற முழு பங்களிப்பு வழங்குவது என்றும் பென்சன் மாற்றத்திற்காக சென்னை மற்றும் டெல்லியில் நடைபெற உள்ள போராட்டத்தில் கலந்து கொள்ள முயற்சி செய்வது என முடிவு செய்யப்பட்டது.

தோழர்  C V சந்திரசேகரதாஸ் நன்றி கூறினார் .

தோழர்கள் 

K காளி பிரசாத் ரூபாய் 1000/-

V மாதவன் நாயர் ரூபாய் 1000/-

S சதிஷ்குமார் ரூபாய் 1000/-

T முருகன் ரூபாய் 1000/- ஆகியோர் மாவட்ட மாநாட்டுக்கு நன்கொடை வழங்கி உள்ளனர் .

தோழமையுடன் 
K வேலப்பன் 
கிளை செயலாளர் 

குழித்துறை

Post a Comment

0 Comments