Latest

10/recent/ticker-posts

உற்சாகமாய் நடைபெற்ற குன்னூர் மாவட்ட மாநாடு 19.09.2024

 உற்சாகமாய் நடைபெற்ற குன்னூர் மாவட்ட மாநாடு 19.9.24







 தோழர்களே, 

.            AIBDPA குன்னூர் மாவட்ட மாநாடு 19.9.24 அன்று எழுச்சியுடன் நடைபெற்று முடிந்துள்ளது.

 மாவட்ட நிர்வாகிகளாக தலைவர் : தோழர். R.சதாசிவம்,

 மாவட்டச் செயலாளர் : தோழர்.A ஆரோக்கியநாதன்,

மாவட்டப் பொருளாளர் : தோழர்.A. பாலன் 

உள்ளிட்ட 19 தோழர்கள் மாவட்டச் சங்க நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். 

             மாநாட்டில் AIBDPA மாநிலச் செயலர் தோழர். ஆர். ராஜசேகர், BSNLEU அகில இந்திய உதவி பொதுச் செயலாளர் தோழர். S. செல்லப்பா, BSNLEU மாநில தலைவரும் ஒப்பந்த ஊழியர் சம்மேளனத்தின் அகில இந்திய துணைப் பொதுச் செயலாளருமான தோழர். பாபு ராதாகிருஷ்ணன், சமூக செயல்பாட்டாளரும் பாரதி புத்தகாலய பொறுப்பாளருமான தோழர். பத்ரி நாராயணன், மாநிலச் சங்க உதவி பொருளாளர் தோழர். நிசார் அகமது உள்ளிட்டோர்  கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்.

           பிறகு நடைபெற்ற குடும்ப நிகழ்ச்சியில் வயநாடு நிலச்சரிவு பேரிடரின் போது உயிரை பணயம் வைத்து காட்டாற்று வெள்ளத்தை கம்பி வழியாக  கடந்து 34 பேருக்கு மருத்துவ உதவி செய்திட்ட செவிலியர் தோழியர். A. சபீனா அவர்களை நாம் கௌரவித்தோம். அது ஒரு நெகிழ்வான நிகழ்ச்சியாக நடைபெற்றது.

              பிறகு மாநாட்டு  தீர்மானமாக குன்னூர் மாவட்டத்தில் ஒரு கிராமத்தை தத்தெடுத்து அதற்கு தேவையான உதவிகளை செய்வது என மாநாடு ஏக மனதாக முடிவெடுத்துள்ளது.

 இது ஒரு சிறப்பான முடிவு. முடிவெடுத்த குன்னூர் தோழர்களை நாம் வெகுவாக பாராட்டுகிறோம். 

மாநாட்டில் நூற்றுக்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டார்கள்.
தோழமையுடன் 
ஆர் ராஜசேகர் 
மாநில செயலாளர்

20.9.24

Post a Comment

0 Comments