2024 ஆகஸ்ட் மாத பென்ஷன் பட்டுவாடா காலதாமதம் !!
தோழர்களே,
2024 ஆகஸ்ட் மாத பென்ஷன் பல தோழர்களுக்கு இதுவரையில் சென்றடையவில்லை. பல்வேறு தோழர்கள் தொடர்ந்து தகவல் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். நிர்வாகம் நமக்கு கொடுத்த உறுதிமொழி கடைசி நாளுக்கு முன்னதாகவே பென்ஷன் பட்டுவாடா செய்யப்படும் என்பது தான். அதற்கான நடவடிக்கைகளையும் எடுத்து விட்டதாகவும் கூறினார்கள்.
30.8.24 அன்று காலை பட்டுவாடாவும் தொடங்கியது. ஆனால் 1.9.24 காலை 8 மணி வரை இன்னும் பல தோழர்களுக்கு பென்ஷன் சென்றடையவில்லை. இது ஓய்வூதியர்கள் மத்தியில் ஒரு கொந்தளிப்பினை ஏற்படுத்தி இருக்கிறது. கோபம் நியாயமானது தான்.
வழக்கமாக பென்ஷன் பட்டுவாடா துவங்கியதில் இருந்து ஐந்து அல்லது ஆறு மணி நேரத்திற்குள் முழுமையாக முடிந்து விடும். ஆனால் இப்பொழுது 48 மணி நேரம் ஆகியும் பென்ஷன் பட்டுவாடா முடியவில்லை என்பது துரதிஷ்டவசமான நிகழ்வு.
SBI வங்கியின் Serverல் ஏற்பட்டிருக்கும் தொழில்நுட்பக் கோளாறு காரணம் என்று காரணம் சொல்லப்படுகிறது. இது எப்படி ஒவ்வொரு மாதமும் நிகழும் என்பது நமது ஐயப்பாடு. மாநில சங்கம் 30 8 24 அன்று பிரின்சிபல் CCA திரு. அவதேஷ் குமார் மற்றும் CCA திருமதி இந்து மாதவி ஆகியவர்களை சந்தித்த பொழுது இதை முறையாக கண்காணிக்க வேண்டும் என்று நாம் வலியுறுத்தினோம்.
தென் மாநிலங்களில் கர்நாடகாவில் இன்னும் பென்ஷன் பட்டுவாடா முழுமை பெறவில்லை. தமிழகத்திலும் பென்ஷன் பட்டுவாடா மெதுவாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மாநில சங்கம் தொடர்ந்து நிர்வாகத்தோடு பேசிக் கொண்டிருக்கிறோம். அனைவருக்கும் பென்ஷன் விரைவில் வர ஏற்பாடு செய்வோம்.
நாளை 2.9.24 காலை வரை காத்திருந்து பிறகு நிர்வாகத்தை சந்தித்து நம்முடைய கண்டனத்தை தெரிவிப்போம். பென்ஷன் பட்டுவாடா மாதம் தோறும் பிரச்சனையாவதை நாம் சகித்துக் கொள்ள முடியாது.
முறையாக தலையிடுவோம். பிரச்சினையை தீர்த்து வைப்போம்.
தோழமையுடன்ஆர் ராஜசேகர்
மாநிலச் செயலாளர்
1.9.24
0 Comments