எழுச்சியுடன் நடைபெற்ற AIBDPA 4வது கடலூர் மாவட்ட மாநாடு-விழுப்புரம் -10.09.2024
AIBDPA கடலூர் 4வது மாவட்ட மாநாடு நேற்று (10.09.2024) விழுப்புரத்தில் தோழர்கள். V. ஜெயராமுலு - K. கதிர்வேல் நினைவு அரங்கில் ஆசான் மஹாலில் மாவட்ட தலைவர் தோழர். N.மேகநாதன் தலைமையில் மிக எழுச்சியுடன் நடைபெற்றது.
மாநிலச்செயலர் தோழர். R. ராஜசேகர் மாநாட்டினை துவக்கி வைத்து சிறப்பாக உரையாற்றினார். மாநாட்டு அறிக்கையினை மாவட்ட செயலர் தோழர். I.M. மதியழகன் அவர்களும், நிதிநிலை அறிக்கையை மாவட்ட பொருளாளர் தோழர்.B. சந்திரசேகரன் அவர்களும் சமர்ப்பித்தனர். பின்னர் நடைபெற்ற விவாதம் மற்றும் மாவட்ட செயலரின் தொகுப்புரைக்கு பின் ஆண்டறிக்கை மற்றும் நிதி நிலை அறிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
மாநாட்டில் கலந்து கொண்ட கடலூர் மாவட்ட BSNL பொதுமேலாளர் திரு. S. பாலச்சந்திரன், BSNLEU மாநில துணைத்தலைவர் தோழர். K.T. சம்பந்தம், மாவட்ட செயலர் தோழர். S.சௌந்தரராஜ், TNTCWU மாவட்ட செயலர் தோழர். S.V. பாண்டியன், போக்குவரத்து ஓய்வூதியர் சங்க பொதுச்செயலாளர் தோழர். D. ராமமூர்த்தி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
மாநிலத் தலைவர் தோழர். C.K. நரசிம்மன், மாநில சிறப்பு அழைப்பாளர் தோழர். S. முத்துக்குமரசாமி கருத்துரை வழங்கினர். மாநில துணைத் தலைவர் தோழர்.P.மாணிக்கமூர்த்தி நிறைவுரை ஆற்றினார். மாநில பொருளாளர் தோழர். S. நடராஜா மாநாட்டை வாழ்த்தி செய்தி அனுப்பியிருந்தார்.
மாநாட்டில் 70 வயது தோழர்களுக்கு சால்வை அணிவித்து கௌரவிக்கப்பட்டது. செஞ்சி தோழர் E. கன்னியப்பன் மத்திய, மாநில, மாவட்ட, கிளை சங்கத்திற்கு தலா ரூ.1,000/- நன்கொடை வழங்கினார். இறுதியில் மாவட்ட பொருளாளர் தோழர். B. சந்திரசேகரன் அவர்கள் நன்றி கூற மாநாடு இனிதே நிறைவு பெற்றது.
காலை உணவு ஏற்பாடு : தோழர்.M.காமராஜ் (CDM),
Pad & Pen ஏற்பாடு : தோழர்கள்.G.திருவேங்கடம், A.பாஸ்கரன்(VLU),
மாவட்டத் தலைவர் : தோழர். N. மேகநாதன் VLU
துணைத்தலைவர்:
1.S.முத்துக்குமரசாமி CDL2.P.வெங்கடேசன் CDL3.G.கோவிந்தராஜலு NVI4.N.சுந்தரம் GIE5.N.P.சேகர் VLU
மாவட்டச் செயலர் : தோழர். I.M.மதியழகன் CDL
உதவிச் செயலர்:
1.A.அண்ணாமலை CDL2.R.V.ஜெயராமன் CDL3.P.ரத்தினம் KAC4.I.துரைசாமி TNV5.G.நாகராஜன் VLU
மாவட்டப் பொருளாளர் : தோழர்.B.சந்திரசேகரன் CDL
அமைப்புச் செயலர்கள்:
1.C.பாண்டுரங்கன் PRT2.M.காமராஜ் CDM3.V.மணி CDL4.சற்குணவதி கனகசபை CDL5.V.சுந்தர் ARA
சிறப்பு அழைப்பாளர்:
1.R.உஷா CDL2.E.பாலு CDL3.V.சுரேஷ் பாபு NVI4.N.மூர்த்தி CDM5.N.தேவர் VLU
தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகளின் பணி சிறக்க மாவட்ட சங்கத்தின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.
0 Comments