AIBDPA TN சுற்றறிக்கை 14/24 ...dt.06.09.2024
வீறு கொண்ட CCA அலுவலக எழுச்சிமிகு தார்ணா போராட்டம் 05.09.2024
தோழர்களே,
BSNL MTNL ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் 5.9.24 அன்று சென்னை Pr.CCA அலுவலகம் முன்பாக தார்ணா போராட்டம் எழுச்சியுடன் நடைபெற்றது. தமிழகம் முழுவதும் இருந்து நமது தோழர்கள் 210க்கும் மேல் மாநில சங்கத்தின் சார்பாக தார்ணாவில் கலந்து கொண்டது பாராட்டுக்குரியது.
தார்ணா போராட்டம் AIBDPA, BDPA (I) மற்றும் SNPWA சங்கங்களின் கூட்டு தலைமையில் நடைபெற்றது.
நமது மாநில சங்கத்தின் சார்பில் மாநில தலைவர் தோழர். C.K. நரசிம்மன் தலைமை பொறுப்பேற்று தலைமை உரையாற்றினார். தோழர். கே. கோவிந்தராஜ் மாநிலச் செயலர் AIBDPA சென்னை தொலைபேசி வரவேற்புரை நிகழ்த்தினார்.
தோழர் S. லிங்கமூர்த்தி FNTO அகில இந்திய தலைவர் போராட்டத்தை துவக்கி வைக்க, தோழர் S. செல்லப்பா AGS BSNLEU மற்றும் தோழர் P.மோகன் மாநிலச் செயலாளர் AIPRPA தமிழ்நாடு ஆகியோர் சிறப்புரை நிகழ்த்தினர்.
மாநிலச் செயலாளர் R.ராஜசேகர், மத்திய சங்க நிர்வாகிகள் தோழர் S. மோகன் தாஸ், தோழியர் V.சீதாலட்சுமி ஆகியோர் கருத்துரை வழங்கினர்.
தோழர் குப்பன் AIBDPA சென்னை தொலைபேசி மாநில தலைவர், தோழர் D சந்திரசேகர் மாநிலச் செயலாளர் BDPA தமிழ்நாடு, தோழர்.D. சுப்பிரமணியம் மாநிலச் செயலாளர் BDPA சென்னை தொலைபேசி, தோழர். ஆர் அண்ணாமலை மாநில தலைவர் சென்னை தொலைபேசி BSNLCCWF ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்
தமிழக முழுவதும் இருந்து வந்த நம்முடைய தோழர்களுக்கு காலையில் குளிப்பதற்கும் உணவும் RGMTTC சென்னையி்ல் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. சுமார் 70-க்கும் மேற்பட்ட தோழர்கள் அங்கு வந்திருந்தது என்பது நமக்கு உற்சாகம் அளித்தது.
வேலூர் 40
ஈரோடு 20
பாண்டிச்சேரி 20
சேலம் 20
கடலூர் 18
தூத்துக்குடி 11
விருதுநகர் 8
திருச்சி 10
கோயம்புத்தூர் 9
கும்பகோணம் 8
சென்னை 25
மற்றும்
தர்மபுரி
குன்னூர்
நாகர்கோயில்
திருநெல்வேலி
மதுரை
தஞ்சை
என அனைத்து பகுதிகளில் இருந்து தோழர்கள் கலந்து கொண்டார்கள்.
நாகர்கோயில் மற்றும் கோவையிலிருந்து மூன்று பெண்கள் உட்பட நான்கு தோழியர்கள் கலந்து கொண்டது மிகவும் பாராட்டுக்குரியது.
போராட்டத்தின் இடையே Pr.CCA திரு.அவதேஷ் குமார் அவர்களை சந்தித்து கூட்டு நடவடிக்கையின் குழு சார்பாக கோரிக்கை மனுவை அளித்தோம்.
அவர் நமது போராட்டத்தை பார்த்து பிரமித்துப் போய் இருக்கிறார் என்பது அவருடைய பேச்சிலிருந்து தெரிய வந்தது.
அதிகமான ஓய்வூதியர்கள் கட்டுப்பாடாக கலந்து கொண்டிருக்கிறார்கள் என்று நம்முடைய போராட்டத்திற்கு வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டார்.
நாம் மகஜர் கொடுக்கின்ற பொழுதே பென்ஷன் காலதாமதத்தை குறித்தும் விவாதித்தோம். அவர் இனி எவ்வித பிரச்சனையும் இல்லாமல் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். வரக்கூடிய மாதங்களில் பென்ஷன் பட்டுவாடா முன்னதாக பெறுவதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று மீண்டும் உறுதிமொழி அளித்துள்ளார்.
தோழர்களே !!
தார்ணா போராட்டம் தமிழ்நாடு & சென்னை தொலைபேசி கூட்டு நடவடிக்கையின் குழு சார்பாக சுமார் 350-க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்ட எழுச்சிமிக்கதாக நடந்து முடிந்துள்ளது.
அடுத்த கட்டமான 12.11.24 டெல்லி போராட்டத்தையும் எழுச்சிமிக்கதாக நடத்துவதற்கு நடவடிக்கைகளை எடுப்போம். மாவட்ட சங்கங்கள் பயணத்திற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும். கூடுதலாக தோழர்களை அழைத்துச்செல்ல நடவடிக்கை எடுக்கவும்.
பென்ஷன் மாற்றம் பெறுகின்ற வகையில் நமது போராட்டம் முழு வீச்சுடன் தொடரும்.
தோழமை வாழ்த்துக்களுடன்ஆர் ராஜசேகர்
மாநில செயலர்
6.9.24
0 Comments