Latest

10/recent/ticker-posts

AIBDPA TN சுற்றறிக்கை 15/24 ....dt.06.09.2024

 AIBDPA TN சுற்றறிக்கை 15/24 ....dt.06.09.2024

தமிழ்நாடு வட்ட CGM  BSNL திரு S. பார்த்திபன் அவர்களோடு சந்திப்பு 5.9.24

தோழர்களே !!

            புதியதாக பொறுப்பேற்று இருக்கும் CGM தமிழ்நாடு வட்டம் திரு S. பார்த்திபன் அவர்களை நமது மாநில சங்கத்தின்  மாநில தலைவர் தோழர் C.K.நரசிம்மன், மாநில செயலாளர் R.ராஜ சேகர், மாநில துணைத்தலைவர் தோழர் P. மாணிக்க மூர்த்தி ஆகியோர் 5.9.24 மாலை 5 மணியளவில் சந்தித்தோம். உடன் GM (HR) திரு துளசிராமன் அவர்கள் இருந்தார்கள். 

CGM புதிதாக பொறுப்பேற்று இருப்பதால் அவருக்கு நம் சங்கத்தின் சார்பாக சால்வை அணிவித்து கௌரவித்தோம். அத்துடன் அவரிடம் நமது பிரச்சினைகளை சந்தித்து ஒரு சிறு முன்னுரையை கொடுத்திருக்கிறோம். 

1) தமிழகத்தில் கடந்த காலங்களில் நடந்திருக்க கூடிய பென்ஷனர் மெடிக்கல்  அதாலத்  விவரங்களை தெரியப்படுத்தினோம்.

a) ஆகஸ்ட் '23 மாநிலம் முழுவதும் நடைபெற்ற பென்ஷனர் மெடிக்கல் அதாலத் 1,100 க்கும் மேற்பட்ட பிரச்சினைகள் தீர்க்கப்பட்டது. 

b) மே '24லில் 11 BAக்களிலும் ஒரு வார காலத்துக்குள் நடந்து முடிந்த மெடிக்கல் அதாலத்துக்கள். 

இதன் விளைவாக ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒவ்வொரு பகுதியிலும் அதாலத் நடைபெறும் என்று தலமட்ட நிர்வாகங்கள் முடிவெடுத்து இருப்பது. 

3) மாநில சங்கத்தின் தொடர் முயற்சியின் காரணமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் பென்ஷனருக்கு என்று நோடல் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டிருப்பது, போன்ற விவரங்களை நாம் அவரிடம் நினைவுபடுத்தி இருக்கிறோம். 

இவையெல்லாம் கடந்த காலங்களில் தமிழகத்தில் நிர்வாகம் பென்ஷனருக்காக செய்திருக்கக் கூடிய நல்ல விஷயங்கள். 

இவை தொடர்ந்து சிறப்பாக நடைபெற வேண்டும் என்று தேவையை வெளிப்படுத்தி இருக்கின்றோம். அவர் இவற்றிற்கெல்லாம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளார். 

4) அடுத்து மெடிக்கல் பில்கள் சம்பந்தமாக Non empanell ஹாஸ்பிடலில் எடுக்கப்படக்கூடிய சிகிச்சைகளுக்கு பல மாவட்டங்களில் பில்கள் அனுப்பப்பட்டாலும் CGM அலுவலகத்தில் அவை பல காரணங்களை காண்பித்து நிராகரிக்கப்படுவதையும், 

கண் சம்பந்தப்பட்ட சிகிச்சைகள் தொடர்பான பில்கள் பரிசீலிக்கப்படுவதில் பல்வேறு குழப்பங்கள் இருப்பதையும் நாம் விவரித்து இருக்கிறோம். 

GM HR அவர்களை இது சம்பந்தமாக பரிசலிக்க CGM வழிகாட்டி உள்ளார். 

5) பிறகு மெடிக்கல் அலவன்ஸ்/பில்கள்  ஒவ்வொரு மூன்று மாதத்திற்கு முறையாக வந்து கொண்டிருக்கிறது ஆனால் இதில் பல இடங்களில் ERPல் update செய்வதில் இருக்கக்கூடிய குறைபாடு காரணமாக பலருக்கு பணப்பட்டுவாடாவில் பிரச்சனை வருகிறது. ஆகவே இது முறையாக update செய்யப்படுவதை மாநில நிர்வாகம் கண்காணிக்க வேண்டும் என்பதனை வலியுறுத்தினோம். 

அவரும் நம்முடைய கோரிக்கையை புரிந்து கொண்டு GM HR அவர்களிடம் ஒவ்வொரு காலாண்டுக்கு முன்பாகவும் 15ஆம் தேதிக்குள் ERPல் அப்டேட் செய்வதற்கு மாவட்டங்களுக்கு வழிகாட்ட வேண்டும் என்று குறிப்பிட்டிருக்கிறார். 

தோழர்களே !!

         மாவட்ட சங்கங்கள் நாமும் நம்முடைய பணியினை சரியாக செய்ய வேண்டும். ஒவ்வொரு காலாண்டுக்கு முன்பாகவும் மெடிக்கல் பில்/ அலவன்ஸ் போடுகின்ற பொழுது நாம் மாவட்ட நிர்வாகத்தோடு தொடர்பு கொண்டு அவை 15ஆம் தேதிக்கு முன்பாகவே ERPல் அப்டேட் செய்யப்படுவதை நாம் உறுதி செய்தாக வேண்டும்.

 தற்போது செப்டம்பர் 30 நிதி பட்டுவாடா செய்யப்படும். 

ஆகவே செப்டம்பர் 15க்கு முன்பாக அவை ERPல் அப்டேட் செய்வதை மாவட்ட சங்கங்கள் உறுதிப்படுத்த வேண்டும்.

 6) பிறகு ஓய்வூதியம் சம்பந்தமாக பணியிலிருந்து ஓய்வு பெறக்கூடிய ஊழியர்களுடைய பென்ஷன் பேப்பர்ஸ் காலதாமதமாக அனுப்பப்படுவதனை நாம் குறிப்பிட்டிருக்கிறோம். ஒரு சில மாவட்டங்களில் கடந்த மே மாத பணி ஓய்வு பெற்றவர்களுடைய விண்ணப்பங்கள்  காலதாமதமாக வந்த காரணத்தினால் அவர்களுக்கு செப்டம்பர் முதல் மாதத்தில் தான் பண பட்டுவாடா செய்யப்படுகிறது, என்பதை குறிப்பிட்டு இது முறைப்படுத்தப்பட வேண்டும். ஓய்வு பெறும் மறு மாதமே அவர்களுக்கு ஓய்வூதிய பலன்கள் கிடைப்பதற்கும் பென்ஷன் கிடைப்பதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பதனை வலியுறுத்தி இருக்கிறோம். 

அதே போல் குடும்ப ஓய்வூதியம் சம்பந்தமாக தரப்படக்கூடிய தரவுகளை முறையாக கையெழுத்திட்டு பரிசோதித்து அவற்றை CCA அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். அங்கிருந்து வரக்கூடிய கடிதங்களுக்கும் உடனடியாக முறையாக பதில்கள் அனுப்பப்பட வேண்டும். இது குடும்ப ஓய்வூதியம் பெறுவதில் உள்ள காலதாமதத்தை குறைக்கும் என்பதனை நாம் குறிப்பிட்டிருக்கிறோம். 

இப்பொழுது பல பிரச்சினைகள் காரணமாக ஒரு குடும்ப ஓய்வூதியம், இறந்ததிலிருந்து முதல் பென்ஷன் பெறுகின்ற வரை சுமார் 8 மாத காலம் ஆகிவிடுகிறது என்பதையும் நாம் CGM அவர்களிடம் தெரிவித்து இருக்கிறோம். அவர் இவற்றுக்கெல்லாம் நடவடிக்கை எடுக்கப்படும், மாவட்டங்களுக்கு போதிய வழிகாட்டுதல் கொடுக்கப்படும் என்று அவர்கள் உறுதி அளித்துள்ளார்கள். 

தோழர்களே 

CGM திரு S. பார்த்திபன் அவர்கள் நம்முடைய ஓய்வூதியர் பிரச்சனைகளை  மனிதாபிமான கோணத்தோடு அணுகக் கூடியவர் என்பது தெரிகிறது. 

நிச்சயமாக வரும் காலத்திலும் நாம் ஓய்வூதியர் பிரச்சினைகளை தீர்ப்பதில் நம்முடைய முயற்சி மேற்கொள்வோம். 

மாவட்ட சங்கங்கள் மாவட்ட நிர்வாகத்தோடு தொடர்ந்து தொடர்பில் இருக்க வேண்டும் என்பதையும் கேட்டுக் கொள்கின்றோம். 

நாம் கேட்டவுடன் நமக்கு நேரத்தை ஒதுக்கி நம்முடைய பிரச்சனைகளை விவாதித்த மாநில CGM நிர்வாகத்திற்கு நமது நன்றி. 

தோழமை வாழ்த்துக்களுடன் 
ஆர் ராஜசேகர் 
மாநிலச் செயலாளர்

6.9.24

Post a Comment

0 Comments