சிறப்பாக நடைபெற்ற திருச்சி மேற்கு கிளை கூட்டம்
தோழர்கள் அனைவருக்கும் வணக்கம் !
06.10.2024 ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணி அளவில் திருச்சி மேற்கு கிளை கூட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது. கூட்டத்திற்கு மேற்கு கிளை துணைத் தலைவர் தோழர். திராவிட மணி அவர்கள் தலைமை ஏற்று நடத்தினார். மேற்கு கிளைச் உதவி செயலாளர் தோழர். K. நாகராஜ் வரவேற்புரை நிகழ்த்தினார். தோழர் R.பஞ்சலிங்கம் அஞ்சலி உரையாற்றினார். அதனைத் தொடர்ந்து கிளை செயலாளர் தோழர். D. ருக்மாங்கதன் கிளை செயல்பாடுகள் பற்றி விரிவாக எடுத்துரைத்தார்.
அதனைத் தொடர்ந்து AIBDPA மாவட்ட செயலாளர் (பொறுப்பு) தோழர். A. இளங்கோவன் திருச்சி மாவட்ட சங்க செயல்பாடுகள் குறித்தும், வரக்கூடிய 2024 டிசம்பர் 19, 20 ஆகிய தேதிகளில் திருச்சியில் நடைபெற இருக்கும் AIBDPA வின் 7- வது தமிழ் மாநில மாநாடு சம்பந்தமாகவும், நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற அதற்கான வேலைகளைப் பற்றியும் விரிவாக எடுத்துக் கூறினார். மாநில மாநாட்டிற்கு ஒவ்வொரு உறுப்பினரிடம் இருந்தும் மாவட்ட செயற்குழு முடிவின்படி குறைந்த பட்சம் ஆயிரம் ரூபாய் நன்கொடையாக பெற வேண்டும் என்றும், அதற்கு மேலும் விருப்பமுள்ளவர்கள் கொடுக்கலாம் என்றும் வலியுறுத்தினார். மேற்கு கிளையின் சார்பாக (முதல் தவணையாக மாவட்ட செயற்குழுவில் ரூபாய் ஐந்தாயிரமும்) இரண்டாவது தவணையாக இந்த கிளை கூட்டத்தில் ரூபாய் 10 ஆயிரமும் நன்கொடையாக மாவட்ட சங்கத்திடம் வழங்கப்பட்டது.
நன்கொடை வழங்கிய மேற்கு கிளைக்கு, மாவட்ட சங்கத்தின் சார்பாக, மாவட்ட செயலாளர் நன்றியிணை தெரிவித்துக் கொண்டார். அதனைத் தொடர்ந்து, கூட்டத்திற்கு வருகை தந்து சிறப்பித்த அத்தனை தோழர்களுக்கும், தோழியர்களுக்கும், தோழர். N. ராதாகிருஷ்ணன் நன்றி கூறி கூட்டத்தை முடித்து வைத்தார்.
தோழமையுடன்A.இளங்கோவன்
மாவட்ட செயலாளர் (பொறுப்பு) *AIBDPA-திருச்சி*
0 Comments