Latest

10/recent/ticker-posts

சிறப்பாக கொண்டாடுவோம் 16 வது AIBDPA சங்க அமைப்பு தினத்தை - 21.10.24 !!

 சிறப்பாக கொண்டாடுவோம் 16 வது AIBDPA சங்க அமைப்பு தினத்தை - 21.10.24.

தோழர்களே,

AIBDPA சங்கத்தின் 16 வது அமைப்பு தினம் அக்டோபர் 21.

            தொழிலாளர் வர்க்க பார்வையோடு, போர்குணமிக்க சங்கமாக, வீர நடை போட்டு, எண்ணற்ற போராட்டங்களை நடத்தி, பல்வேறு பிரச்சனைகளை தீர்த்து வைக்கும் ஓய்வூதியர் சங்கம் AIBDPA. 

ஓய்வூதிய நலன், BSNL  வளர்ச்சி மற்றும் தேச நலன் பாதுகாப்பது உள்ளிட்ட அனைத்து அம்சங்களிலும் உறுப்பினர்களை அணிதிரட்டி இயக்கம் நடத்தும் சங்கம் AIBDPA. 

15 ஆண்டுகளை கடந்த இதன் அமைப்பு தினத்தை நம்முடைய தோழர்கள், மிக எழுச்சியுடன் நடத்த வேண்டும். 

14.10.24 அன்று நடைபெற்ற மாநில செயற்குழு கூட்டத்தில் கிளைகள் தோறும் கொடியேற்றி, ஒரு சமூக சேவை நிகழ்வோடு இந்த தினத்தை கடைபிடிக்க வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

சேலம் மாவட்டம், சேந்தமங்கலம் கிளை தோழர்கள் 50 மரக்கன்றுகள் விநியோகம் செய்து அமைப்பு தினத்தை ஒரு சமூக நோக்கோடு அனுசரிப்பது என்று முடிவு எடுத்து இருக்கிறார்கள்.

இது ஒரு நல்ல முன் உதாரணம். 

இதே போல் ஒவ்வொரு  கிளை, மாவட்ட சங்கத் தோழர்களும் தங்களால் இயன்ற சமூக சேவையோடு இந்த அமைப்பு தினத்தை சிறப்பாக எழுச்சியோடு கொண்டாட வேண்டும் என மாநில சங்கம் கேட்டுக்கொள்கிறது. 

தோழமை வாழ்த்துக்களுடன் 
ஆர் ராஜசேகர் 
மாநில செயலாளர் 

16 10 24

Post a Comment

0 Comments