கோவில்பட்டி கிளை பொதுக்குழு கூட்டம் 19-10-2024
தோழர்கள் அனைவருக்கும் வணக்கம்.
நமது தூத்துக்குடி மாவட்ட கோவில்பட்டி கிளை பொதுக்குழு கூட்டம் 19-10-2024 காலை 1100 மணி அளவில் KVT பாரதி இல்லத்தில் வைத்து கிளைத் தலைவர் தோழர். R. மகேந்திரமணி தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. அஞ்சலி உரையினை தோழர். சுப்பையா ADS நிகழ்த்தினார். கிளைச் செயலர் தோழர். S. ஆறுமுகம் வரவேற்புரையாற்றினார்.
AIBDPA மத்தியச் சங்க துணைத் தலைவர் தோழர் எஸ். மோகன்தாஸ் சிறப்புரையாற்றினார். அவர் தனது உரையில் நடைபெற இருக்கின்ற 7வது திருச்சி மாநில மாநாடு, 16வது அமைப்பு தினம் அதன் இன்றைய அறைகூவல்கள் மற்றும் Online மாநில செயற்குழு முடிவுகள், COC, BSNL /MTNL ஓய்வூதியர் கூட்டு போராட்டகுழு போராட்டங்களை விரிவாக எடுத்துறைத்தார். போராட்டங்கள் மற்றும் மாநாடுகளின் செலவினங்களை ஈடுகட்ட தாராளமாக நிதி வழங்கிட கேட்டுக் கொண்டார்.
தூத்துக்குடி மாவட்டச் செயலர் தோழர் பெ.ராமர் தனது துவக்க உரையில் தலமட்ட பிரச்சனைகளில் மாநில மாவட்டச் சங்கங்களின் தலையீட்டினால் பிரச்சனைகளில் ஏற்பட்ட தீர்வுகள், CoC, BSNL /MTNL ஓய்வூதியர் சங்க கூட்டு போராட்டகுழு போராட்டங்களை முன்னெடுப்பதும் நமது மாவட்டத்தில் சிறப்பாக நடத்திட கூடுதல் தோழர்களை திரட்டிவர வேண்டுகோள் விடுத்தார். மேலும் ONLINE மாநில செயற்குழு முடிவுகளாக உறுப்பினர் எண்ணிக்கையை பலப்படுத்துவது 7வது திருச்சி மாநில மாநாட்டை சிறப்பாக நடத்தவும், 6வது மாவட்ட மாநாட்டை நடத்தவும் தேவையான நிதி வழங்கிட கேட்டுக் கொண்டார். மாவட்ட மாநில மாநாடுகளையும் வரவிருக்கும் காலங்களில் மாவட்ட மாநில டெல்லி போராட்டங்களை ஈடுகட்ட தேவையான நிதிகளை தந்து உதவிட வேண்டும் எனவும் நிதி கோரிக்கையை முன்வைத்தார். 16வது அமைப்பு தினத்தை கிளைகளில் சிறப்பாக கொண்டாட வேண்டுகோள் விடுத்தார். மருத்துவபடி அலவன்ஸ்களில் உள்ள நிலைபாடுகளை விளக்கினார்.
மாவட்ட துணைத்தலைவர் தோழர் K.கந்தசாமி மற்றும் மாவட்ட துணைச் செயலர் தோழர். கோலப்பன் கூட்டத்தை வாழ்த்தி பேசினர். 23க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்த கொண்ட கூட்டத்தின் நிறைவாக கிளை நிர்வாகி தோழர். பாலகிருஷ்ணன் நன்றி கூற கூட்டம் நிறைவுற்றது. கலந்து கொண்டு சிறப்பித்த தோழர்கள் அனைவருக்கும் மாவட்ட, கிளைசங்கத்தின் பாராட்டுக்கள்.
தோழமையுடன்தோழர். S. ஆறுமுகம்,
கிளைசெயலர்
கோவில்பட்டி
0 Comments