25.10.2024 அன்று ஆர்ப்பாட்டம் நடத்திடுக– ஒருங்கிணைப்புக் குழுவின் அறைகூவல்
BSNLEU, AIBDPA மற்றும் BSNLCCWF சங்கங்களின் மாநில ஒருங்கிணைப்புக் குழுவின் கூட்டம், 19.10.2024 அன்று காணொளி வாயிலாக நடைபெற்றது. இக்கூட்டத்தில், மத்திய ஒருங்கிணைப்புக்குழு முடிவுகளை அமல் படுத்த, அனைத்து மாவட்ட குழுக்களின் கூட்டத்தை உடனடியாக கூட்ட வேண்டும், போராட்டங்கள் அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பாக நடத்துவது குறித்து திட்டமிட வேண்டும் என்றும் முடிவெடுக்கப்பட்டது.
இயக்கங்கள் :-
1) 25.10.2024 - கிளைகள் தோறும் ஆர்ப்பாட்டம்
2) 27.11.2024 :- மாவட்ட தலைநகர்களில் தர்ணா
கோரிக்கைகள் :-
1) ஊதிய மற்றும் ஓய்வூதிய மாற்றங்களை உடனடியாக தீர்வு காண வேண்டும்.
2) BSNLன் 4G மற்றும் 5G சேவைகளின் துவக்கத்தை விரைவு படுத்துக.
3) 2வது VRS திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு.
4) ஒப்பந்த ஊழியர்களுக்கு, குறைந்த பட்ச ஊதியம், EPF மற்றும் ESI ஆகியவற்றை அமல் படுத்துக.
5) கேசுவல் ஊழியர்களுக்கு 7வது ஊதியக் குழுவின் ஊதிய விகிதங்கள் மற்றும் 2 தவணை பஞ்சப்படி ஆகியவற்றை வழங்கிடு.
இயக்கங்களை வெற்றிகரமாக நடத்திட மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கள் திட்டமிட்டு தகவலை மாநில மையத்திற்கு தெரியப்படுத்தவும்.
தோழமையுடன்P.ராஜூ
COC.மாநில அமைப்பாளர்
Fwd
R.ராஜ சேகர்
CS AIBDPA TN
20.10.24
0 Comments