உற்சாகமாக நடைபெற்ற கோவையின் 7வது மாவட்ட சங்க மாநாடு
கொங்கு நகரில் கோவை மண்டலத்தில் விழாக்கோலம் கொண்ட AIBDPA 7வது மாவட்ட சங்க மாநாடு 15.10.23. மாவட்ட முழுவதும் இருந்து கிட்டத்தட்ட 500 தோழருக்கு மேலாக கலந்து கொண்டு அதில் மகளிர் தோழர்கள் 104 பேர் உட்பட கலந்துகொண்டு தோழர் B சவுந்தரபாண்டியன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற மாநாடு.
காலை சரியாக 0930 மணிக்கு விண்ணதிரும் முழக்கத்தோடு தோழர். வெங்கட்ராஜுலு தேசியக் கொடியேற்றி, மூத்த தோழியர். சாவித்திரி சங்க கொடி ஏற்றி, தியாகிகளுக்கு நினைவஞ்சல செலுத்தப்பட்டு தோழர்கள் மதனகோபால் மற்றும் தங்கமணி நுழைவாயிலில் துவங்கி மாநாட்டு நிகழ்ச்சிகள் துவங்கியது. மாவட்ட மாநாட்டு நிகழ்ச்சிகள் தோழர். வாமனன் நினைவு அரங்கில் நடைபெற்றது. தோழர். ராஜசேகரன் அஞ்சலி நிகழ்ச்சியை நடத்தினார்.
மாவட்டத் தலைவர் தோழர் B சவுந்தரபாண்டியன் தலைமை உரையாற்றினார். மாவட்டச் செயலாளர் தோழர். A.குடியரசு அனைவரையும் வரவேற்று பேசினார். தொடர்ந்து வாழ்த்துரைகளாக மாநில நிர்வாகிகள் தோழர். முகமது ஜாபர், தோழர். நிசார் அகமது, தோழர் பிரசன்னா, தோழியர் மகுடேஸ்வரி மற்றும் அகில இந்திய அமைப்புச் செயலாளர் தோழர். வெங்கட்ராமன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
மாநிலச் செயலாளர் தோழர். ஆர். ராஜசேகர் மாநாட்டை துவக்கி வைத்து இன்று நம்முடைய சங்க செயல்பாடுகள் கூறி உலக அரசியல் சம்பந்தமாக பல்வேறு நிகழ்ச்சிகளை சுட்டி காட்டினார். அதைத்தொடர்ந்து நமது மாவட்ட நிர்வாக தரப்பில் திருவாளர் பால்வண்ணன் DGM ADMN மற்றும் AGM ADMN சுதா ஆகியோர் நமது மாவட்ட சங்கத்திற்கும் நிர்வாகத்திற்கும் இருக்கும் உறவுகளை சொல்லி நமது மாவட்ட மாநாட்டை வாழ்த்தி பேசினர்.
தோழர்T.சுப்பிரமணியம் NCCPA அமைப்பு சார்பில் கருத்துரை வழங்கினார். புலவர் ந. கவுதமன் ஓய்வூதியர்கள் எப்படி வாழ வேண்டும் என்று தனது கருத்தை பதிவு செய்தார். BSNLEU மாநில தலைவர் பாபு ராதாகிருஷ்ணன் வாழ்த்துரை வணங்கினார்.
மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு பொருளாய்வு குழு துவங்கியது. மாவட்ட செயல்பாட்டு அறிக்கையும் நிதி அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. தோழர்கள். A.y. முத்தலிப் மற்றும் மகேஸ்வரன் BSNLEU மாவட்ட செயலாளர் வாழ்த்துரை வழங்கினர். பதினோரு கிளைகளில் இருந்து 12 தோழர்கள் விவாதத்தில் பங்கெடுத்தனர். சில விளக்கங்களுக்கு பிறகு இறுதியாக ஆண்டறிக்கை மட்டும் நிதி அறிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டது. வரும் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் தேர்வு மாநில செயலாளர் நடத்திக் கொடுத்தார். புதிய நிர்வாகிகள் பட்டியல் ஏக மனதாக தேர்வு செய்யப்பட்டது.
தொடர்ந்து CREDENTIAL COMMITTEE மற்றும் தீர்மான குழு மூலம் தீர்மானமும் வாசிக்கப்பட்டது. இவைகள் ஏக மனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. இறுதியாக தோழர். நாகராஜ் நன்றி கூறி கூட்டத்தை நிறைவு செய்தார்.
A.குடியரசு மாவட்ட செயலாளர் கோவை மாவட்டம்
0 Comments