திருச்சியில் சிறப்பாக நடைபெற்ற 7-வது மாநில மாநாட்டிற்கான வரவேற்பு குழு கூட்டம்.
தோழர்களுக்கு வணக்கம் !
18.10. 2024 வெள்ளிக்கிழமை மாலை 3 மணி அளவில் திருச்சி G. M அலுவலக வளாகத்தில் 7-வது தமிழ் மாநில மாநாட்டிற்கான வரவேற்பு குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தை AIBDPA திருச்சி மாவட்ட துணை தலைவர் தோழர். P.கிருஷ்ணன் அவர்கள் தலைமை ஏற்று நடத்தினார். திருச்சி மாவட்ட செயலாளர் (பொறுப்பு) தோழர். A. இளங்கோவன் அவர்கள் மாநில மாநாடு சம்பந்தமாக நடைபெறுகின்ற வேலைகளைப் பற்றி விரிவாக எடுத்துரைத்தார்.
அதனைத் தொடர்ந்து அகில இந்திய துணை தலைவர் தோழர். S. மோகன்தாஸ், மாநில பொருளாளர் தோழர். S.நடராஜா, மாநில செயலாளர் தோழர். R.ராஜசேகர் ஆகியோர், மாநில மாநாட்டிற்கான வரவேற்பு குழுவின் பங்களிப்பை பற்றியும், வேலைகளை பற்றியும், நிதிநிலை பற்றியும் விரிவாக உரையாற்றினார்கள். நன்கொடை புத்தகங்கள் வந்துவிட்டதால் அவற்றை அந்தந்த மாவட்டங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட புத்தகங்களை உடனடியாக அனுப்ப வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். மாநில மாநாட்டை சிறப்பாக நடத்த இருக்கின்ற திருச்சி மாவட்ட வரவேற்பு குழுவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்கள்.
இந்த வரவேற்பு குழு கூட்டத்திற்கு AIPRPA திருச்சி மாவட்ட செயலாளர் தோழர். T. P. சிவசுப்பிரமணியன் மற்றும் பொருளாளர் தோழர். R. தண்டபாணி அவர்களும், கலந்து கொண்டனர். NCCPA திருச்சி மாவட்ட செயலாளர் தோழர். N. கோபால்சாமி அவர்கள், வரவேற்பு குழுவில் NCCPA வின் உறுப்பு சங்கங்களின் பங்களிப்பு முழுமையாக இருக்கும் என்று கூறி வரவேற்பு குழுவை வாழ்த்தி பேசினார்.
இறுதியாக தோழர் K.சின்னையன் அவர்கள் நன்றி கூறி கூட்டத்தை முடித்து வைத்தார்.
தோழமையுடன்
A. இளங்கோவன், மாவட்ட செயலாளர் (பொறுப்பு) AIBDPA, திருச்சி.
0 Comments