AIBDPA விருதுநகர் மாவட்ட 2 வது விரிவடைந்த செயற்குழு கூட்டம்
தோழர்கள் அனைவருக்கும் வணக்கம்.
AIBDPA விருதுநகர் மாவட்ட சங்கத்தின் 2 வது விரிவடைந்த மாவட்ட செயற்குழு கூட்டம் M. R. V நினைவு அரங்கம் விருதுநகரில் மாவட்ட தலைவர் தோழர். ஜி. செல்வராஜ் அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. ராஜபாளையம் கிளை செயலர் தோழர. சி. பொன்ராஜ், திருவில்லிபுத்தூர் கிளை செயலர் தோழர். ஜி. பாண்டி மகளிர் கிளை செயலர் தோழியர். எஸ். உமா முன்னிலை வகித்தனர்.தோழர். எ. இன்பராஜ் சிவகாசி கிளை செயலர் அஞ்சலி உரை நிகழ்த்தினார். தோழர் க. புளுகாண்டி மாவட்ட செயலர் வரவேற்புரையும் வேலை அறிக்கையும் எடுத்துரைத்தார்.
அதன் பின்னர் மாநில உதவி தலைவர் தோழர். எம். பெருமாள்சாமி வாழ்த்துரை வழங்கினார். சிறப்புரையாக மாநில செயலர் தோழர். ஆர். ராஜசேகர் அவர்கள் பென்சன் மாற்றமும் நமது போராட்டமும் பற்றிய உரை நிகழ்த்தினார். தோழர் எஸ். மோகன்தாஸ் அவர்கள் அகில இந்திய உதவி தலைவர் உலக ஓய்வூதியர் தினமும் பென்சன் பாதுகாப்பும் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். விருதுநகர் கிளை செயலர் தோழர். கே. முருகேசன் நன்றி சொல்லி 2 வது விரிவடைந்த செயற்குழுவை நிறைவு செய்தார்.
கூட்டத்தில் 24 பெண் தோழர்களும் 63 ஆண் தோழர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். செயற்குழுவில் கலந்து கொண்டு சிறப்பித்த அத்துணை தோழர்களுக்கும் மாவட்ட சங்கம் சார்பில் புரட்சிகர வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
தோழமையுடன்க. புளுகாண்டி
மாவட்ட செயலர்
AIBDPA
விருதுநகர்.
0 Comments