Latest

10/recent/ticker-posts

AIBDPA நாகர்கோவில் மாவட்ட எழுச்சிமிகு 6வது மாவட்ட மாநாடு

 AIBDPA நாகர்கோவில் மாவட்ட எழுச்சிமிகு 6வது மாவட்ட மாநாடு 







                   AIBDPA நாகர்கோவில் மாவட்ட மாநாடு எழுச்சிமிகு 6வது மாவட்ட மாநாடாக 8.10.24 தொலைபேசி வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் சிறப்பாக நடந்து முடிந்தது. முன்னதாக காலையில் சங்க கொடியை மாநில செயலாளர் தோழர். R. Rajasekar ஏற்றி வைத்தார். தலைமை உரையில் மாவட்ட தலைவர் தோழர். அ. மீனாட்சி சுந்தரம் நாம் கடந்து வந்த பாதையை நினைவு கூறினார். வரவேற்புரையில் மாவட்ட செயலாளர் தோழர். க. ஜார்ஜ் BSNL ஊழியர் சங்க மாவட்ட மாநாடு நடப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது என்று கூறி அனைவரையும் வரவேற்றார். 

              துவக்கவுரையில் மாநில செயலாளர் தோழர். R. ராஜசேகர் முதலாளித்துவத்தின் கோர முகத்தையும், பென்சன் மாற்றம் வேண்டி நாம் நடத்திய இயக்கங்கள் பற்றியும், மெடிக்கல் அலவன்ஸ் மற்றும் அரியர்ஸ், மெடிக்கல் பில் பட்டுவாடா போன்றவற்றில் நமது சங்கம் எடுத்த முயற்சிகள் பற்றி விரிவாக பேசினார். 

            தோழர். S. மோகன்தாஸ் கருத்துரையில் போராட்டம் மூலம் தான் நாம் பல பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டு உள்ளோம். எனவே பிரச்சினைகளில் தீர்வு காண தொடர்ந்து போராடுவோம் என கூறினார்.தோழியர். ப. இந்திரா சாம்சங் ஆலைபிரச்சினைகள் பற்றியும் தொழிலாளர்கள் நேரிடும் கஷ்டங்கள், செங்கொடியின் பங்கு பற்றி விரிவாக பேசினார். 

               தோழர்கள் C. பழனிச்சாமி மாநில தலைவர் TNTCWU, R. சுயம்புலிங்கம்  BSNLEU மாவட்ட செயலாளர், S. ராஜகோபால் TNTCWU மாவட்ட செயலாளர் வாழ்த்துரை வழங்கினர். மேலும் திருநெல்வேலி மாவட்ட செயலாளர். தோழர். S. முத்துசாமி, தூத்துக்குடி மாவட்ட செயலாளர் தோழர். P. ராமர் வாழ்த்துரை வழங்கினர். நிர்வாக தரப்பில் திரு. சுதிர் DGM, திரு.  விஜயன் AGM ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர். 

மாவட்ட செயலாளர் செயல்பாட்டு அறிக்கை சமர்பித்து ஒப்புதல் பெற்றார். பொருளாளர் நிதி அறிக்கை சமர்பித்து ஒப்புதல் பெற்றார். தோழர். B. கணபதியா பிள்ளை நன்றி கூறினார். 

தோழர். அ. மீனாட்சி சுந்தரம் மாவட்ட ஆலோசகர் 

மாவட்டத் தலைவர் : தோழர். C. ஆறுமுகம் 

மாவட்டச் செயலாளர் : தோழர். K. ஜார்ஜ் 

மாவட்டப் பொருளாளர் : தோழர். B. சுப்பிரமணியன் உள்ளிட்ட 21 மாவட்ட நிர்வாகிகள் ஏக மனதாக தேர்வு செய்யப்பட்டனர். மாநாட்டில் 147 தோழர்கள் கலந்து கொண்டனர். நமது மாநாட்டில் 75வயது பூர்த்தியடைந்த 10  தோழர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

               முடிவாக பெண்கள் கிளை அமைப்பது, உறுப்பினர் எண்ணிக்கை அதிகப்படுத்துவது, சமூக நலம் சார்ந்து ஒரு கிராமத்தை தேர்வு செய்து அந்த பகுதி மக்களுக்கு உதவுவது என முடிவு செய்யப்பட்டது.

                    உறுப்பினர் அனைவரின் பெயர் விலாசம் மற்றும் தொலைபேசி எண் உள்ள டயரி கொடுக்கப்பட்டது. மிக சிறப்பாக நடைபெற்ற மாநாட்டிற்கு உழைத்த மற்றும் நன்கொடை வழங்கிய அனைத்து தோழர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள், பாராட்டுக்கள்.

க ஜார்ஜ் மாவட்ட செயலாளர் நாகர்கோவில்

Post a Comment

0 Comments