AIBDPATN சுற்றறிக்கை 19/24....dt.9.10.24
2024- தோழர் CSP அவர்களின் நூற்றாண்டு நிறைவு.
தமிழ்நாடு-சென்னை தொலைபேசி சங்கங்கள் இணைந்து நடத்தும்
சிறப்புக் கருத்தரங்கம் -17-10-24
தோழர்களே !
அஞ்சல் மற்றும் தொலைதொடர்புத்துறை ஊழியர்களுக்கு மட்டுமின்றி, பல்துறை ஊழியர்களுக்கும் தொழிற்சங்க ஈடுபாட்டையும், இடதுசாரி சிந்தனையையும் பயிற்றுவித்து வளர்த்தெடுத்த முன்னோடி - மார்க்சிய தத்துவ ஆசான் தோழர். C. S. பஞ்சாபகேசன் அவர்களது நூற்றாண்டு நிறைவை முன்னிட்டு வரும் 17-10-24 அன்று மாலை 3 மணி முதல் 6 மணிவரை...
சென்னை கிரீம்ஸ் ரோட்டிலுள்ள CGM தமிழ்நாடு அலுவலக வளாகத்தில் சிறப்புக்கருத்தரங்கம் நடைபெறவுள்ளது.
தோழர். S. செல்லப்பா (AGS,BSNLEU,CHQ) தலைமையேற்க...
தோழர். M. ஸ்ரீதரசுப்ரமணியன் (CS,BSNLEU,CHTD) வரவேற்க....
தோழர்கள்.. P.அபிமன்யு(GS,BSNLEU,CHQ)
P.சம்பத் (தீண்டாமை ஒழிப்பு முன்னணி)
S.மோகன்தாஸ் (VP, AIBDPA,CHQ) ஆகியோர் சிறப்புரையாற்ற,
BSNLEU, AIBDPA, TNTCWU தலைவர்கள் வாழ்த்துரை வழங்குவர்.
தோழர்.R.ராஜசேகர் (CS, AIBDPA, TNC) நன்றியுரை.
தோழர் CSP அவர்களின் குடும்பத்தாரும் இந்நிகழ்வில் பங்கேற்பர்.
இதில் நமது தோழர்கள் திரளாக பங்கேற்க வேண்டுகிறோம்
தமிழ் மாநில AIBDPA பங்கேற்பு 100.
வேலூர் 30,
கடலூர் 20,
பாண்டி 20,
சென்னை 20,
கோவை, ஈரோடு, சேலம் தலா 5,
மற்ற மாவட்டங்கள் தலா 3 என பங்கேற்பை உறுதி படுத்துவோம்.
தோழர் CSPஅவர்கள் காட்டிய லட்சியப்பாதையில் நாம் தொடர்ந்து பயணிக்க சபதமேற்போம் !
R.ராஜ சேகர்.மாநில செயலர்.
AIBDPA TN
9.10.24
0 Comments