Latest

10/recent/ticker-posts

AIBDPA TN சுற்றறிக்கை 21/24.....dt. 15.10.2024

  AIBDPA TN  சுற்றறிக்கை 21/24.....dt.   15.10.2024                         

மாநில மாநாட்டை நோக்கிய மாநில செயற்குழு 14.10.24 

தோழர்களே !

                 நமது சங்கத்தின் (AIBDPA) மாநில  செயற்குழு கூட்டம் 14.10.2024 அன்று ஆன்லைன் மூலமாக நடைபெற்றது. கூட்டத்திற்கு தோழர். சி. கே. நரசிம்மன் அவர்கள் மாநில தலைவர் தலைமை தாங்கினார். கூட்டத்தில்  அகில இந்திய நிர்வாகிகள் தோழர்கள். S.மோகன்தாஸ், V.வெங்கட்ராமன் மற்றும் V சீதாலட்சுமி, மாநில   சங்க நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் மற்றும் தணிக்கையாளர் உட்பட நிர்வாகிகள் பெருமளவில் கலந்து கொண்டார்கள். 

           கூட்டம் காலை 10.45 மணியளவில் ஆரம்பித்து மதியம் 01.45 வரை நடைபெற்றது. கூட்டத்தில் நீண்ட விவாதத்திற்கு பின்னர் கீழ்க்கண்ட முடிவுகள் ஒருமனதாக  எடுக்கப்பட்டது.

 எடுக்கப்பட்ட முடிவுகள் :-

1) முதல் நிகழ்ச்சியாக அஞ்சலி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

2) நமது ஏழாவது மாநில மாநாட்டை திருச்சியில் நடத்துவதற்கு ஏற்றுக் கொண்டு ஏற்பாடுகளை சிறப்பாக துவக்கி உள்ள திருச்சி மாவட்ட சங்கத்திற்கும் தோழர்களுக்கும் மாநில செயற்குழு பாராட்டுதல் தெரிவித்தது.  

3) மாநில சங்கத்தின் வேண்டுகோளின்படி மாநில மாநாட்டுக்காக துவக்க நிதியாக ரூபாய் 50 ஆயிரத்தை வழங்கிய கோயம்புத்தூர் மாவட்ட சங்கத்திற்கு வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவிக்கப்பட்டது.

4) மாநில மாநாடு வருகின்ற 2024 டிசம்பர் மாதம் 19 மற்றும் 20 ஆகிய செய்திகளில் திருச்சியில் நடைபெற உள்ளது.

a) அதற்கான கீழ்கண்ட முடிவுகளை நீண்ட விவாதத்திற்கு பின்னர் ஒருமனதாக எடுக்கப்பட்டது. மாவட்டங்கள் கீழ்கண்ட அடிப்படையில் மாநில மாநாட்டுக்காக நிதி வசூல் செய்வது என்றும் மாநாட்டுக்கான சார்பாளர்களை மாவட்டங்களில் இருந்து தேர்வு செய்வது என்றும் ஒரு மனதாக முடிவு செய்யப்பட்டது. மாவட்ட வாரியாக கீழே அந்த தகவலை கொடுத்து இருக்கிறோம்.

1) கோவை மாவட்டம் நன்கொடை=2 லட்சத்து 75 ஆயிரம் சார்பாளர்கள்=74

2) ஈரோடு மாவட்டம் நன்கொடை=ஒரு லட்சத்து 50 ஆயிரம் சார்பாளர்கள் =40

3) வேலூர் மாவட்டம் நன்கொடை=ஒரு லட்சத்து 20 ஆயிரம் சார்பாளர்கள்=32

4) சேலம் மாவட்டம் நன்கொடை=75 ஆயிரம் சார்பாளர்கள்=20

5) மதுரை மாவட்டம் நன்கொடை =60 ஆயிரம் சார்பாளர்கள்=17

6) விருதுநகர் மாவட்டம் நன்கொடை=50 ஆயிரம் சார்பாளர்கள் =14

7) நாகர்கோவில் மாவட்டம் நன்கொடை=45 ஆயிரம் சார்பாளர்கள் =12

8) தூத்துக்குடி மாவட்டம் நன்கொடை=40 ஆயிரம் சார்பாளர்கள்=10 

9) திருநெல்வேலி மாவட்டம் நன்கொடை =40 ஆயிரம் சார்பாளர்கள்=10

10) தர்மபுரி மாவட்டம் நன்கொடை =30 ஆயிரம் சார்பாளர்கள்=08

11) கடலூர் மாவட்டம் நன்கொடை =30 ஆயிரம் சார்பாளர்கள்=08

12) சென்னை மாவட்டம் நன்கொடை=30 ஆயிரம் சார்பாளர்கள்=07

13) கும்பகோணம் மாவட்டம் நன்கொடை=20 ஆயிரம் சார்பாளர்கள்=05

14) பாண்டிச்சேரி மாவட்டம் நன்கொடை=20 ஆயிரம் சார்பாளர்கள்=05

15) நீலகிரி மாவட்டம் நன்கொடை =20 ஆயிரம் சார்பாளர்கள் =05

16) தஞ்சாவூர் மாவட்டம் நன்கொடை =8 ஆயிரம் சார்பாளர்கள்=02

17) காரைக்குடி மாவட்டம் நன்கொடை=5 ஆயிரம் சார்பாளர்கள்=02

மொத்த சார்பாளர்கள் 283.

மாவட்ட செயலர்கள் + மாநில சங்க நிர்வாகிகள்+ சிறப்பு அழைப்பாளர்கள்= 50.

5) மாநில மாநாட்டுக்கான நிதியினை மாவட்டங்கள் வசூல் செய்து வசூலிக்கும் போது வரும் நிதியினை உடனுக்குடன் திருச்சி மாவட்ட  வரவேற்புக்கு குழுவிற்கு அனுப்புவது என்றும், இறுதியாக நிர்ணயிக்கப்பட்ட கோட்டாவினை வரும் டிசம்பர் மாதம் 5ஆம் தேதிக்குள் திருச்சி மாநில மாநாட்டு வரவேற்புக்குழுவிற்கு அனுப்ப வேண்டும் என்றும் ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது.

                 அதேபோல் பாக்கி உள்ள ரசீதுகளை வசூல் முடித்ததும் உடனடியாக வரவேற்புக் குழுவிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது. அதேபோல்        நிர்ணயிக்கப்பட்ட சார்பாளர்களை மாவட்ட சங்கங்கள் முறையாக தேர்ந்தெடுத்து மாநில சங்கத்திற்கு தெரிவிக்கவேண்டும்.

6) மாநாட்டுக்கான  சார்பாளர் கட்டணமாக ரூபாய் 1000 வசூல் செய்வது என்று முடிவு செய்யப்பட்டது.

7) திருச்சி மாவட்ட சங்கத்தின் விருப்பத்திற்கு ஏற்ப தேவைப்படும் பட்சத்தில்  பக்கத்தில் உள்ள மாவட்டங்களில் இருந்து  தோழர்களை பயன்படுத்திக் கொள்வது என்று முடிவு செய்யப்பட்டது.

8) மாவட்ட  மாநாடுகளை நடத்தாத மாவட்ட சங்கங்கள் விரைவில் மாநாடுகளை நடத்த வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.

9) 2024 நவம்பர் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் நடைபெறும் டெல்லி பேரணியில் நாம் திட்டமிட்டபடி முழுமையாக கலந்து கொண்டு டெல்லி பேரணியை சிறப்பாக வெற்றி பெற செய்வது என்று முடிவு செய்யப்பட்டது.

10) JOINT FORUM மற்றும்   NCCPA சார்பில் எம்பிக்களிடம் மனு கொடுக்கும் அந்த நிகழ்ச்சியை விரைவில் அனைத்து மாவட்டங்களும் அனைவருடம் இணைந்து நிறைவேற்ற எல்லா முயற்சிகளையும் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது.

11) வெற்றிகரமாக போராடும் சாம்சங் தொழிலாளர்களுக்கு நமது முழுமையான ஆதரவை தெரிவிப்பதோடு அந்தப் போராட்டத்திற்கு பல்வேறு வடிவங்களில் உதவிகளை செய்வது என்றும் முடிவு செய்யப்பட்டது          

12) சென்னை சொசைட்டி பிரச்சனையில் இன்னும் சற்று  தீவிரம்காட்டி தோழர்களின் பணத்தை பெறுவதற்கு மாநில சங்கம் அனைத்து முயற்சிகளும் செய்வது என்று முடிவு செய்யப்பட்டது.

13) மாநில செயற்குழு கூட்டத்தை ஆன்லைன் மூலம் நடத்துவதற்கு எல்லா ஏற்பாடுகளையும் செய்த தூத்துக்குடி மாவட்ட செயலாளர் தோழர் பி.ராமர் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

 ஆரம்பம் முதல் கடைசி வரை இருந்து கலந்து கொண்ட அகில இந்திய தலைவர்கள் மாநில சங்க நிர்வாகிகள்  மாவட்ட செயலாளர்  சிறப்பு அழைப்பாளர்கள் மற்றும் தணிக்கையாளர் ஆகிய அனைவருக்கும் மாநில சங்கத்தின் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.  

தோழர்களே ! 

         நாட்கள் மிக மிக குறைவாக தான் உள்ளது. எடுக்கப்பட்ட முடிவுகளை தொடர் நடவடிக்கைகள் மூலமாக முழுமையாக நிறைவேற்றும் பணியை நாம் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

 ஒன்று பட்டு முன்னேறுவோம் !!

 தோழமையுடன் 
 ஆர்.ராஜசேகர்
 மாநில செயலாளர்,
AIBDPA தமிழ் மாநிலம் 

15 10 2024

Post a Comment

0 Comments